ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடைசி வரை கதவை தட்டாத வாய்ப்பு.. பிக் பாஸ் ஷிவானி எடுத்த அதிரடி முடிவு!

கடைசி வரை கதவை தட்டாத வாய்ப்பு.. பிக் பாஸ் ஷிவானி எடுத்த அதிரடி முடிவு!

ஷிவானி

ஷிவானி

திடீரென்று ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று கேட்டதற்கு ஷிவானி நாராயணன் தரப்பில் தற்போது தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைக்கான இடம் காலியாக இருக்கிறது என்றனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சின்னத்திரையில் அல்லது பெரிய திரையில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டுமென்று என்பது பலரின் கனவாக உள்ளது. அந்த கனவுடன் தான் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். ஷிவானி நாராயணனுக்கு அறிமுகமே தேவையில்லை! சமூக வலைத்தளத்தில் முடிசூடா ராணியாக வலம் வருபவர்களில் இவரும் ஒருவர். இவருடைய புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான நடனங்களுக்காகவே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலில் குடும்பப் பாங்காக அறிமுகமான ஷிவானி நாராயணனை பலரும் விரும்பினர். குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பிக்பாஸ் சீசன் வழியே தனக்கு பொதுமக்களுடன் அதிகமாக பரிச்சயம் ஆகும், இதனால் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிக்பாஸ் சீசன் நான்கிலும், கவர்ச்சியான ஆடைகளுடன் அவ்வப்போது வலம் வந்தார். நிகழ்ச்சியில் இறுதி வாரத்துக்கு முன்பு எலிமினேட் ஆனார். ஆனால், ஷிவானி எதிர்பார்த்த அளவுக்கு எந்த சினிமா வாய்ப்புமே கிடைக்கவில்லை.

  இதையும் படிக்க.. திரும்ப திரும்ப தப்பு செய்யும் வெற்றி… அபி உனக்கு இது தேவையாம்மா?

  இவர் தனது முதல் சீரியலின் நாயகன் அசீம் உடன் காதலில் இருக்கிறார், அசீம் ஏற்கனவே திருமணமானவர் என்றெல்லாம் வதந்திகள் வந்தன. அதற்குப் பிறகு பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் முடிந்த பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். சீரியல் ஒளிபரப்பான சில வாரங்களிலேயே வெளியேறிவிட்டார். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

  அதன் பிறகு, சீரியல் வாய்ப்பும் இல்லாமல், திரைப்படங்களிலும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காமல் ஷிவானி டிசைன் டிசைனாக போட்டோ ஷூட்களை நடத்தி, புகைப்படங்களையும் நடன வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்திருந்தார்.


  இதனிடையில் பலத்த சிபாரிசுடன் ஷிவானிக்கு கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்திலும் இவர் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார் எந்த தகவலும் உறுதியாகியுள்ளது. இரண்டு திரைப்படங்களில் தற்போது வாய்ப்பு கிடைத்திருந்தாலும், எதிர்பார்த்தபடி ஹீரோயினாக முடியவில்லை!

  இன்னும் எவ்வளவு காலம் தான் காத்திருப்பது, ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடுமோ என்று நினைத்து கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, குத்துப் பாட்டுக்கு ஆடலாம் என்றும், கவர்ச்சி நடிகையாகவும் மாற முடிவெடுத்துள்ளார். இந்த முடிவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

  இதில் மிகவும் முக்கியமானது, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கம்பேக் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் நாய் சேகர் திரைப்படத்தில் ஷிவானி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஷிவானி மிகவும் கவர்ச்சியான வேடத்தில் திரைப் படம் முழுவதும் வருகிறார் என்பதைப் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வடிவேலுவின் கம் பேக் பற்றி பெரிதாக யாரும் கூறவில்லை என்பதும்வடிவேலுவின் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

  அதே நேரத்தில் திடீரென்று ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று கேட்டதற்கு ஷிவானி நாராயணன் தரப்பில் தற்போது தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைக்கான இடம் காலியாக இருக்கிறது அந்த இடத்தை ஷிவானி நிரப்புவார் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி வடிவேலு கம்பேக் என்ற படத்தை பார்க்கிறார்களோ இல்லையோ ஷிவானியின் கவர்ச்சிக்காகவே படத்திற்கு ரசிகர்கள் வருவார்கள் என்றும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, TV Serial, Vijay tv