Home /News /entertainment /

நல்ல செய்தி சொன்ன ஷிவானி நாராயணன்.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

நல்ல செய்தி சொன்ன ஷிவானி நாராயணன்.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன்

ஷிவானி ரசிகர்கள் அவரை முழு நீள ஹீரோயின் ரோலில் பார்க்க ஆசைப்பட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஓணம் திருநாளன்று தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார் இன்ஸ்டா அழகி ஷிவானி நாராயணன்.

    சின்னத்திரை டூ வெள்ளித்திரை ஸ்டார் ஷிவானி சினிமாவில் நுழைந்த கதை அனைவரும் அறிந்த ஒன்று. இளைஞர்களின் சோஷியல் மீடியா க்ரஷாக இருந்த ஷிவானிக்கு முதலில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே பிக் பாஸ் பக்கம் சென்றார். கண்டிப்பாக ஷிவானியின் என்ட்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேற மாதிரி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிச்சம். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு ஷிவானிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அடுத்தடுத்த மூவிகளில் கமிட் ஆனார்.

    நானும் ரொம்ப மிஸ் பண்றேன்.. பாரதி கண்ணம்மா விலகல் பற்றி பேசிய ரோஷினி!

    விக்ரம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. அது  அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மனைவியாக ஷிவானி நடித்து இருந்தார். ஆனாலும் இவரின் கதாபாத்திரத்துக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. அதே போல் ஆர்.ஜே பாலாஜி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு காணமால் போனார். இதனால் ஷிவானி ரசிகர்கள் அவரை முழு நீள ஹீரோயின் ரோலில் பார்க்க ஆசைப்பட்டனர்.

    சீரியலில் நடிக்க வரும் அஜித் பட இயக்குனர்.. எந்த சேனலில் தெரியுமா?

    இந்த ஆசையை ஷிவானியிடம் இன்ஸ்டாவில் பலவகையில் தெரியப்படுத்தினர். இந்நிலையில் ஓணம் திருநாளன்று தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார் ஷிவானி. இயக்குனர் முத்தையாவின் முன்னாள் உதவியாளர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஷிவானி தான் ஹீரோயின்.




    கேரளா லாட்டரியை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு ஏற்கெனவே வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் ஷிவானி படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து அதன் மூலம் ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை ஷேர் செய்துள்ளார். ஷிவானிக்கு ரசிகர்கள் பம்பர் படத்திற்காக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Kollywood, Vijay tv

    அடுத்த செய்தி