• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி நிகழ்ச்சிக்காக சிவாங்கி செய்த காரியம்! குவியும் பாராட்டுக்கள்

விஜய் டிவி நிகழ்ச்சிக்காக சிவாங்கி செய்த காரியம்! குவியும் பாராட்டுக்கள்

சிவாங்கி

சிவாங்கி

கடந்த வாரம் துபாய் சென்றிருந்த சிவாங்கி, அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்திருந்தார்

  • Share this:
    சிவாங்கி வடிவேலு கெட்டப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு ஊரடங்கு காலத்தில் மக்கள் ரசித்து பார்த்த ஷோவாக குக் வித் கோமாளி புகழ் பெற்றது. முதல் சீசனை விட மிகவும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பிரபலமானார்கள்.

    இதில் கனி முதல் பரிசை தட்டி சென்றார். இதில் குக்குகளை விட கோமாளிகள் அதிகமாக பிரபலமாகினர். ரித்விகா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அதில் அதிக ரசிகர்களை பெற்றவர் சிவாங்கி ஆவார். சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் சிவாங்கி. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின், டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

    இதனிடையே ஆல்பம் மற்றும் படங்களிலும் பாடல்கள் பாடியும் வருகிறார். சமீபத்தில் சிம்புவுடன் ஒரு பாடல் பாடியிருந்தார். மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோவில் ஆண்கள் பெண்கள் போலவும், பெண்கள் ஆண்கள் போலவும் வேடமிட்டுள்ளனர். அதன்படி, சிவாங்கி வடிவேலு கெட்டப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தன்னுடைய கலக்கலான காமெடியால் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்ட சிவாங்கி காமெடி நடிகர் வடிவேலு கெட்டப்பில் வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிவாங்கி ஆக்டிவாக இருக்கிறார். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்பற்றுகின்றனர். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வருகிறார்.



    இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில் இன்ஸ்டாவில் மட்டும் சிவாங்கியை 4 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். சமீபத்தில் இதனை கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், வடிவேலு கெட்டப் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு இதுவரை 3.24 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் 1,600க்கும் மேற்பட்டோர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். முன்னதாக கடந்த வாரம் துபாய் சென்றிருந்த சிவாங்கி, அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்திருந்தார். இந்த புகைப்படங்களுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் செய்திருந்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: