விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... சிவாவும் சஹானாவும் இணைகிறார்களா?

இதயத்தை திருடாதே சீரியல்

6 வருடங்களுக்கு பிறகான கதை இதயத்தை திருடாதே அத்தியாயம் 2-ஆக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது

 • Share this:
  சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது கலர்ஸ் தமிழ். தமிழில் இருக்கும் அனைத்து முன்னணி சேனல்களிலும் சீரியல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.

  அந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகிறது "இதயத்தை திருடாதே அத்தியாயம் 2" சீரியல். இந்த சீரியலில் இதயத்தை திருடாதே அத்தியாயம் 1-ல் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்த நடிகர் நவீன் குமார் நடிகை ஹிமா பிந்து ஆகியோர் அதே கேரக்டரில் நடித்து வருகின்றனர்.நடிகர் நவீன் இதில் சிவாவாகவும், சஹானா என்ற கேரக்டரில் நடிகை ஹிமாவும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் முதல் அத்தியாயத்தில் ஹீரோ சிவாவை போலீஸ் கைது செய்து கூட்டி செல்வதை போல காட்டப்பட்ட நிலையில், அதிலிருந்து 6 வருடங்களுக்கு பிறகான கதை இதயத்தை திருடாதே அத்தியாயம் 2-ஆக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

  இதில் நாயகி தொழிலதிபராக வளர்ந்து விட்டதை போலவும், நாயகன் பெரிய டானாக இருப்பது போலவும் கதை 6 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்கிறது. ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகள் ஐஸ்வர்யா(ஆழியா) தாய் சஹானாவிடமே வளர்கிறார். நாளை விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகை நாளை முன்னிட்டு இதயத்தை திருடாதே சிறப்பு எபிசோட்கள் இன்றும், நாளையும் ஒளிபரப்பாக இருக்கிறது. ஸ்பெஷல் எபிசோட்களில் பல ட்விஸ்ட்கள் காத்திருக்கின்றன. இது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரமோ மூலம் நமக்கு தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கதைப்பபடி, நாயகி சஹானா தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் நேரத்தில், அவரது மகள் ஐஷு வீட்டிலிருந்து காணாமல் போய் விடுகிறார். ஒருவேளை ஐஷு, சிவாவின் இடத்தில இருக்கலாம் என்று யூகித்து  விரைகிறாள் சஹானா. சிவா தன்னுடைய அப்பா என்று தெரியாமலே அவன் நடத்தும் பூஜையில் பங்கேற்றுள்ள ஐஷுவை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் நாயகி.  திடீரென அங்கு வரும் கங்காவின் ஆட்கள் (ரவுடிகள்) சிவாவை கொல்லும் முயற்சியில் ஐஷுவின் கழுத்தில் கத்தி வைக்கிறார்கள். இதனால் சஹானா பீதி அடைகிறாள். பின்னர் ரவுடிகளிடம் இருந்து தன் மகளை சிவா காப்பாற்றுவாரா , இதன் மூலம் சிவா மற்றும் சஹானா மீண்டும் ஒன்றிணைவர்களா என்பதை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எபிசோட்கள் மூலம் தெரிய வரும். எனவே இன்றும், நாளையும் ஒளிபரப்பாக உள்ள "இதயத்தை திருடாதே அத்தியாயம் 2" -வை காண தவறாதீர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: