பிக் பாஸ் ஷெரினிடம் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படமே ஷெரினை ரசிகர்களின் கனவு கன்னியாக்கியது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். ஷெரின் நடித்த விசில் திடைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. நெகடிவ் ரோலில் கலக்கி இருப்பார். இறுதியாக தமிழில் உற்சாகம் திடைப்படத்தில் நடித்தார். அதன் பின்பு திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த ஷெரின், நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
பிக் பாஸ் வைஷ்ணவியை ஃபாலோ செய்த மர்மநபர்.. வெளியானது அதிர்ச்சி வீடியோ!
இந்த நிகழ்ச்சியில் மீண்டும் ஷெரினின் தமிழ் பேச்சு, க்யூட் ரியாக்ஷன்களை ரசிகர்கள் ரசிக்க தொடங்கினர். இவருக்கும் தர்ஷனுக்கும் இடையில் இருந்த ஃபிரண்ட்ஷிப் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. உடற்பருமனால் அவதிப்பட்ட ஷெரின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் போது எடை குறைந்து, புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் வாவ் சொல்ல வைத்தார். அதன் பின்பு அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இனி வெண்பா எனக்கு வேண்டாம்.. முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் பாரதி!
இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார். இதற்கு லைக்ஸ்கள் குவியும். அதே போல் லைவில் ரசிகர்களுடன் உரையாடுவார், அவர்களின் கேள்விகளுக்கும் பதில்சொல்வார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஷெரினிடம் எப்போது கல்யாணம்? என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு ஷெரின் இப்போதைக்கு சாப்பாட்டை திருமணம் செய்து கொண்டேன் என படு ஜாலியாக பதில் அளித்துள்ளார். ஷெரினின் இந்த விளையாட்டான பதிலை கேட்டு ஷாக்கான ரசிகர்கள், கூடிய விரைவில் குட் நியூஸ் சொல்லுங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.