Home /News /entertainment /

மாமியாருடன் சண்டை போட்ட சீரியல் நடிகை.. வெளியானது வீடியோ! கடைசியில் தான் ட்விஸ்டே இருக்கு

மாமியாருடன் சண்டை போட்ட சீரியல் நடிகை.. வெளியானது வீடியோ! கடைசியில் தான் ட்விஸ்டே இருக்கு

சீரியல் நடிகை  ஷாமிலி

சீரியல் நடிகை ஷாமிலி

ரோஜா சீரியலில் இருந்து விலகியது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டது. வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஷாமிலிக்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது

    ரோஜா சீரியல் வில்லி நடிகை ஷாமிலி மாமியாருடன் சண்டை போட்டு ,கடைசியில் ட்விஸ்ட் வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சன் டிவி ஒளிப்பரப்பாகும் ரோஜா தொடரில் வில்லியாக ஷாமிலி சுகுமார் நடித்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்திருந்தார்.காரணம், இவருடைய கதாபாத்திரத்தின் வலிமை. வில்லியாக வரக்கூடிய ஒவ்வொரு பிரேம்களிலும் நடிப்பை தெறிக்க விட்ட அவருக்கு, சன் குடும்ப தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த வில்லிக்கான விருதை பெற்று அசத்தினார். அவருடைய நடிப்பை ரசிகர்கள் பெருமளவு ரசித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென சீரியலில் இருந்து விலகினார்.

    அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் ரோஜா சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது .  ரோஜா சீரியலில் வில்லி பாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் சீரியலில் மேற்கொண்டு நடிக்க முடியாது என்றும் கூறினார். கர்ப்பமாக இருப்பதால், தொடர்ந்து சீரியல் சூட்டிங்கில் பங்கேற்க முடியாது என்பதால், சிறிது காலத்துக்கு நடிப்பில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    சீரியலில் இருந்து வெளியேறினாலும், சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாகவே இருந்தார் ஷாமிலி. இவருடைய வளைகாப்பு, மெட்டர்னிட்டி சூட் புகைப்படங்கள் என்று எல்லாமே ரசிகர்களைக் கவர்ந்தது. சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் செலவழிக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் ஷாமிலி யூடியூபில் ரொமப் பிஸி. அடிக்கடி பிராங் வீடியோ செய்து வெளியிடுவது, பிரியாணி சேலஞ் வைப்பது, ஊர் சுற்றும் வீடியோக்களை வெளியிடுவது என லட்சங்களில் வியூஸ் போகும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

    இதையும் படிங்க.. ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் கலர்ஸ் அம்மன் 3 சீரியல் நடிகை.. என்ன காரணம்?

    அந்த வகையில் அவர் சிவராத்திரி அன்று தனது மாமியாரை பிராங்க் செய்ய, முடியை வெட்டி விட்டது போல் ஏமாற்றி மாமியாருடன் சண்டைக்கு போன வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது ஷாமிலி பாய் கட் செய்த முடி போல் டோப்பா மாற்றிக் கொண்டு மாமியாரை போய் பார்க்கிறார். அவரின் மாமியார் ஷாமிலியை பார்த்து ஷாக் ஆகிவிடுகிறார். உடனே காரணத்தை கேட்டு ஷாமிலியிடம் சண்டை போடுகிறார். பதிலுக்கு ஷாமிலி சண்டை போடுவது போல் நடிக்கிறார். உடனே ஷாமிலி மாமியார் தனது மகனுக்கு ஃபோன் செய்து எல்லாவற்றையும் சொல்லி விடுகிறார். எப்படி கோயிலுக்கு போவது என புலம்பி விட்டு மன வருத்தத்துடன் ரூமுக்கு சென்று விடுகிறார்.



    ஆனால் கடைசியில் ட்விஸ்டாக ஷாமிலி டோப்பாவை கழட்டிவிட்டு புடவை கட்டிக் கொண்டு மாமியார் முன்னாடி போய் சர்ப்பிரைஸ் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி