• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை?

வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை?

ஷாலு ஷம்மு

ஷாலு ஷம்மு

வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு செல்வதால், இவர்களால் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரஸ்யம் கூடும்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் பிரபல நடிகை வீட்டுக்குள் செல்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா மாரிமுத்து விலகினார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். வரும் வாரத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது. இதையடுத்து பிக் பாஸ் தமிழ் 5 போட்டியிலிருந்து வெளியேறும் முதல் நபர் யாரென்று தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

    ஒவ்வொரு சீசனிலும் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் சிலர் வீட்டுக்குள் செல்வார்கள். ஹரீஷ் கல்யாண், பிந்து மாதவி, விஜயலட்சுமி, அர்ச்சனா என கடந்த சீசன்களில் வைல்ட் கார்டு மூலம் வீட்டுக்குள் சென்றவர்களை பட்டியலிடலாம். வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு செல்வதால், இவர்களால் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரஸ்யம் கூடும்.

    இந்நிலையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு போட்டியாளராக நடிகை ஷாலு ஷம்மு வீட்டுக்குள் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் இது குறித்த உண்மை தெரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: