'YNM பேம்லி ஒரு எமோஷன்’ இன்ஸ்டாவில் உருகும் இளம் நடிகை... யார் தெரியுமா?

யாரடி நீ மோகினி சீரியல்

உங்களிடம் இருந்து விடைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தப் அழகான வாழ்க்கை பயணம் குறித்து விவரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

  • Share this:
யாரடி நீ மோகினி சீரியல் என்பது ஒரு வார்த்தை, யாரடி நீ மோகினி Family என்பது எமோஷன் என நடிகை ஷாலினி ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த ‘யாரடி நீ மோகினி’ சீரியல் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மெஹா ஹிட் சீரியலாக அமைந்த ’யாரடி நீ மோகினி’, டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் டாப் இடத்தில் இருந்தது. 1200 எபிசோடுகளைக் கடந்த இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாடகத்தில் நடித்த நடிகர், நடிகைகளும், இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை நினைத்து தங்களின் உருக்கத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீரியல் 2017 ல் தொடங்கியிருந்தாலும், ஷாலினி ரஞ்சன் இடையே ‘ஜனனி’ என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். கடைசி வரைக்கும் சீரியலில் நடித்த அவர், அனைத்து மூத்த நடிகர்களுடன் தனக்கான உறவை ஏற்படுத்திக் கொண்டார். தன்னை அறிமுகப்படுத்திய சீரியல் முடிவுக்கு வந்ததால் வருத்தத்தில் இருக்கும் அவர், சீரியல் முடிவு குறித்து உணர்ச்சிப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‘யாரடி நீ மோகினி சீரியல் என்பது வார்த்தை, யாரடி நீ மோகினி பேம்லி என்பது எமோஷன் எனத் தெரிவித்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Shalini (@shalinirajan__)






மேலும், "உங்களிடம் இருந்து விடைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தப் அழகான வாழ்க்கை பயணம் குறித்து விவரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. சீரியலில் நடித்த அனைவரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டேன். அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்தப் பயணம் முழுவதும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒரு குழு என்பதை விட, ஒரு குடும்பமாக மாறிவிட்டோம் என்று சொல்ல வேண்டும்" என உருக்கமாக ஷாலினி ரஞ்சன் எழுதியுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Shalini (@shalinirajan__)






சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், ஸ்பெஷலாக சைத்திரா ரெட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்னுடைய வெற்றி மற்றும் தோல்வி என என்னுடைய அனைத்து சூழ்நிலைகளிலும் என்னுடன் இருந்ததற்கு நன்றி, என்னுடைய முட்டாள்தனங்களை பொறுத்துக் கொண்டீர்கள். கடினமான நேரங்களில் என்னை வழிநடத்தினீர்கள். இதற்கு மிக்க நன்றி சைத்திரா என உளமாற வார்த்தைகளை பதிவு செய்துள்ளார் ஷாலினி.

Also read... நீண்ட வருடங்களுக்கு பிறகு சன் டிவி சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் மூத்த நடிகை!

இதேபோல், இந்த சீரியலில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் தங்களுடைய உணர்ச்சிகளை ஷோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். லீட் ரோல் முத்தரசன் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீகுமார் கணேஷ், வென்னிலா கதாப்பாத்திரத்தில் நக்ஷத்திரா ஆகியோர் நடித்திருந்தனர். அன்சாரி முக்கிய ரோலில் நடித்திருந்தார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த சீரியலின் கிளைமாக்ஸ் இரண்டு விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. முதல் கிளைமாக்ஸ் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், யாரடி நீ மோகினி சீரியலின் மற்றொரு கிளைமாக்ஸ் ஆக்ஸ்ட் 29ம் தேதி மதியம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
First published: