குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது மகளை அறிவித்த ஷகிலா - நெகிழ்ச்சியான வீடியோ

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது மகளை அறிவித்த ஷகிலா - நெகிழ்ச்சியான வீடியோ

குக் வித் கோமாளி - ஷகிலா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ராவை தனது இரண்டாவது மகளாக நடிகை ஷகிலா அறிவித்துள்ளார்.

  • Share this:
வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கை ரசிகர்கள் வைத்து வரும் நிலையில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தகுதி பெற்றிருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் டைட்டிலைப் பெற்று வெற்றியாளராவார்.

இந்தநிலையில் இன்றும் நாளையும் செலிபிரிட்டி வாரம் கொண்டாடப்பட்டது. இதில் கனி தனது தங்கையை நிரஞ்சனாவையும், ஷகிலா தனது மகளையும் அஸ்வின் நடன இயக்குநர் சாண்டியையும் அழைத்து வந்தனர். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பவித்ரா தீடீரென உணர்ச்சிவசப்பட்டு அழுது தனக்கு அம்மா ஞாபகம் வந்துவிட்டதாகவும் அவர் ஒரு சில காரணங்களால் இங்கு வரமுடியவில்லை என்றும் கண்ணீருடன் கூறியுள்ளார்.



அப்போது வெங்கடேஷ்பட், தற்போது ஷகிலா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூற, உடனே ஷகிலா நேராக பவித்ராவிடம் சென்று ‘மிலா தனது மூத்த மகள் என்றால், பவித்ரா என்னுடைய இளைய மகள் என்றும், நீ யாரும் இல்லை என்று கவலைப்படாதே, நான் இருக்கிறேன் உனக்கு அம்மாவாக என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டார். அவரது இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: