• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அது எப்படி சாத்தியம்? கர்ப்பமாக இல்லாமல் கர்ப்பகால ஃபோட்டோ ஷூட் நடத்திய ஷகீலா மகள் மிளா!

அது எப்படி சாத்தியம்? கர்ப்பமாக இல்லாமல் கர்ப்பகால ஃபோட்டோ ஷூட் நடத்திய ஷகீலா மகள் மிளா!

ஷகிளா மகள் மிளா

ஷகிளா மகள் மிளா

மிளாவும் செயற்கையான முறையில் கர்ப்பிணி போன்ற வயிறை செட் செய்யும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்

  • Share this:
    ஷகீலா மகள் மிளா சமீபத்தில் நடத்திய கர்ப்பகால ஃபோட்டோ ஷூட் மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. அவரின் யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு பாசிடிவ்வான கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    ஷகீலா, மிளாவை தத்தெடுத்து வளர்ப்பது 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சி மூலம் தான் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆடை வடிவமைப்பாளரான மிளா அதன் பின்னர் ஷகீலாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளிட்டார்.
    தங்கள் வாழ்க்கை போராட்டத்தில் ஷகீலாவும், மிளாவும் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்துள்ளனர்.  அதன் பின்னர் மிளா பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கினர். அப்போது தான் மிளா யார் என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ஷகீலா, "இது என்னுடைய மகள் மிளா. இவர் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்றத் தாழ்வுகளிலும் நான் துணையாக இருந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

    காணாமல் போன ராஜா ராணி 2.. மகா சங்கமத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வித் தமிழும் சரஸ்வதியும்!

    அதன் பின்பு மிளாவை பல யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்தனர். அவரை பற்றியும் வலி நிறைந்த அவரின் திருநங்கை வாழ்க்கை பற்றியும் வெளியில் தெரிய வந்தது. இப்போது படித்து முடித்து ஆடை வடிவமைப்பாளராக மிகச் சிறந்த பனியை செய்து வருகிறார் மிளா. பல திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் 5 நிகழ்ச்சியிலும் மிளா கலந்து கொள்ள போகிறார் என பல தகவல்கள் பரவின. கடைசியில் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் போனார். அனைத்து திருநங்கைகளின் சார்பாக தான் நமீதா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருப்பதாக மிளா பெருமையாக கூறி இருந்தார்.

    இந்நிலையில் ’மிளா பேபிகேர்ள்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிடுவார். அந்த வகையில் சமீபத்தில் கர்ப்ப கால ஃபோட்டோ ஷூட் ஒன்றை மிளா நத்தினார். மிளா கர்ப்பமாக இருந்தால் எப்படி இருக்கும்? மற்றும் சமீபத்தில் நடத்தப்படும் வைரல் கர்ப்பகால ஃபோட்டோ ஷூட் பற்றியது தான் அந்த வீடியோ. அந்த வீடியோ பார்பவர்களையும் கண்கலங்க வைக்கிறது. அதுமட்டுமில்லை மிளாவும் செயற்கையான முறையில் கர்ப்பிணி போன்ற வயிறை செட் செய்யும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். பார்ப்பவர்களையும் இந்த காட்சி கரைய வைத்து விடுகிறது.



    யூடியூபில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பாசிடிவ்வான கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: