• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அப்ப எல்லாமே வதந்தியா? பிக் பாஸில் ஷகிலா மகள் இடம்பெறாமல் போக என்ன காரணம்?

அப்ப எல்லாமே வதந்தியா? பிக் பாஸில் ஷகிலா மகள் இடம்பெறாமல் போக என்ன காரணம்?

ஷகிளா மகள் மிலா

ஷகிளா மகள் மிலா

மிலாவை விட நமிதா மாரிமுத்து பிக்பாஸில் பங்கேற்பது சிறப்பாக இருக்கும் என்று விஜய் டிவி நிர்வாகம் முடிவு

 • Share this:
  மிலாவை விட நமிதா மாரிமுத்து பிக்பாஸில் பங்கேற்பது சிறப்பாக இருக்கும் என்று விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் சீசன் 5 கோலாகலமாக துவங்கி உள்ளது. மக்களை வெகுவாக கவர்ந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸை வழக்கம் போல உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 5ல் தற்போது 18 போட்டியாளர்கள் பங்கு பெற்று உள்ளார்கள்.

  அதன்படி முதல் பெண் கானா பாடகர் இசை வாணி, பிரபல சீரியல் நடிகரும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுமான ராஜு ஜெயமோகன், ஜெர்மனியிலிருந்து தமிழ் பொழுதுபோக்கு துறையில் நுழைந்திருக்கும் ஃபேஷன் டிசைனர் மற்றும் மாடலான மதுமிதா, பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய், சீரியல் நடிகையான பாவனி ரெட்டி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, மலேசியா மாடல் நடியா சாங், தலைவா உள்ளிட்ட படங்களில் தோன்றியுள்ள நடிகர் வருண், இமான் அண்ணாச்சி, நடிகையும் மாடலுமான சுருதி பெரியசாமி, வில்லா டு வில்லேஜ் ஷோ புகழ் மாடல் அக்‌ஷரா, ராப் இசை பாடகி ஐக்கி பெர்ரி, தாமரை செல்வி, மாஸ்டர் திரைப்பட புகழ் நடிகர் சிபி, நடிகர் மற்றும் மாடலான நிரூப் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள்.

  கடந்த 2 நாட்களுக்கு முன்னர் துவங்கிய இந்த சின்னத்திரை திருவிழாவில் பங்கேற்க இருந்த போட்டியாளர்கள் பற்றி கடைசி நிமிடம் வரை பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன. அந்த அடிப்படையில் பிக்பாஸ் சீசன் 5-ல் நிச்சயம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல பிரபலங்கள் பங்கேற்கவில்லை. பல புதுமுகங்கள் இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்றுள்ள நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலா போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

  also read.. கணவர் தற்கொலையால் அதிர்ச்சி - இசைவாணியிடம் வருந்தும் பாவனி!

  இதனிடையே மிலா பிக்பாஸில் இடம்பெறாதது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் ஷோவுக்கென்று வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, ஒரு சீசனில் ஒரே நேரத்தில் ஒரு திருநங்கை போட்டியாளர் மட்டுமே பங்கு பெற முடியுமாம். இதனடிப்படையில் மிலா மற்றும் தற்போது ஷோவில் பங்கேற்றுள்ள நமிதா மாரிமுத்து ஆகிய இருவரில் யார் பெஸ்ட் என்று விஜய் டிவி மதிப்பாய்வு செய்ததாகவும், இறுதியில் மிலாவை விட நமிதா மாரிமுத்து பிக்பாஸில் பங்கேற்பது சிறப்பாக இருக்கும் என்று விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஷகீலாவின் வளர்ப்பு மகளான மிலா, நடிகை, மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பன்முக திறமை வாய்ந்தவர். அதே நேரத்தில் நமிதா மாரிமுத்து மாடல் மற்றும் நடிகை ஆவார். மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருதை வென்றுள்ளார். நாடோடிகள் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். மிஸ் கூவாகம், மிஸ் டிரான்ஸ் ஜெண்டர் ஆஃப் இந்தியா உள்ளிட்ட டைட்டில்களையும் வென்றுள்ளார், பிக்பாஸ் தமிழில் முதல் திருநங்கையாக நுழைந்துள்ள நமிதா மாரிமுத்து. ஆனால் மிலாவோ பிக்பாஸில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று யாரும் என்னிடம் வந்து பேசவில்லை, எனக்கு ஏற்கனவே நிறைய சொந்த வேலைகள் இருப்பதால் இந்த ஷோவில் பங்கேற்காதது குறித்து வருத்தமில்லை என்று கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: