Home /News /entertainment /

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஒரே படத்தில் அறிமுகமாகும் சீரியல் நடிகைகள்!

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஒரே படத்தில் அறிமுகமாகும் சீரியல் நடிகைகள்!

ஷபானா ரேஷ்மா

ஷபானா ரேஷ்மா

பகையே காத்திரு என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரேஷ்மா மற்றும் ஷபானா இருவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
     ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸாக ஒரே படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகிறார்கள் சீரியல் நடிகைகள் ரேஷ்மா மற்றும் ஷபானா.

    ஜீ தமிழ் சீரியல் நடிகைகளான ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செம்பருத்தி சீரியல் மூலம் புகழடைந்த ஷபானா இப்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கூடிய விரைவில் டெலிகாஸ்ட் ஆகவுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமான ஷபானாவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோவர்ஸ்.

    செம்பருத்தி ஷபானாவுக்கு அடுத்த சீரியலில் இவர் தான் ஜோடி!

    அதே போல் ஜீ தமிழின் பூவே பூச்சூடவா தொடரின் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா  அதே சீரியலில் நடித்த மதனை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் சீரியலில் நடித்தனர். அந்த சீரியலும் சமீபத்தில் நிறைவடைந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்நிலையில்,  . பகையே காத்திரு என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரேஷ்மா மற்றும் ஷபானா இருவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர்கள் இருவரும் பயங்கர க்ளோஸ் ஃப்ரண்டஸ் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி இருந்தனர்.

    இந்நிலையில் இவர்களின்  வெள்ளித்திரை அறிமுகமும் ஒரே படத்தில் அமைந்துள்ளது. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி