• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பார்வதிக்கு ஏற்ற ஜோடியா பாக்கியலட்சுமி செழியன்? குடும்பம், சம்பளம் குறித்த முழு விவரம்!

பார்வதிக்கு ஏற்ற ஜோடியா பாக்கியலட்சுமி செழியன்? குடும்பம், சம்பளம் குறித்த முழு விவரம்!

பாக்கியலட்சுமி செழியன்

பாக்கியலட்சுமி செழியன்

செழியன் ரோலில் நடிக்கும் நடிகர் வேலு லட்சுமணன் என்கிற ஆர்யனுக்கும் ஃபேன்ஸ் பட்டாளம் அதிகம். குறிப்பாக ஆர்யனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.

  • Share this:
    செம்பருத்தி பார்வதியான ஷபானாவின் நீண்ட நாள் காதல் கதை திருமணத்தில் முடிந்துள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் வேலு லட்சுமணன் என்கிற ஆர்யனை கரம் பிடித்துள்ளார்.

    வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரை நடிகர் நடிகைகளைப் பற்றி ரசிகர்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு பிடித்தமான சீரியல் நடிகர்கள் என்றால் போது அவர்களின் இன்ஸ்டா பக்கத்தை ஃபாலோ செய்வது, அவர்களின் சொந்த ஊர், படிப்பு, குடும்பம் பற்றிய தகவல்களை தேடுவது என அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்கும் பார்வதி ஷபானாவுக்கும், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த இரண்டு பேருமே இப்போது நிஜ ஜோடிகளாக மாறிவிட்டனர். இவர்களின் நீண்ட நாள் காதல் கதை முடிவுக்கு வந்துள்ளது. இந்த காதல் ஜோடி திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளது. சினிமா வட்டாரத்தில் இருந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. செம்பருத்தி சீரியலில் நடிக்கும் ஷபானா பற்றி பலருக்கும் தெரியும். அதே போல் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் ரோலில் நடிக்கும் நடிகர் வேலு லட்சுமணன் என்கிற ஆர்யனுக்கும் ஃபேன்ஸ் பட்டாளம் அதிகம். குறிப்பாக ஆர்யனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.

    செழியனின் சொந்த ஊர் காரைக்குடி. வேலம்மாள் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர், சென்னையில் இன்ஜினியரிங் படிப்பை தேர்தெந்தெடுத்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த செழியனுக்கு சினிமா என்றால் கொள்ளை ஆசையாம். அதனால் தான் மாடலிங், ஷார்ட் பிலிம்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். சென்னை சார்ப்பாக நடத்தப்பட்ட பல மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளார். அப்போது தான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் லீட் ரோலுக்கு அடுத்தப்படியாக துணை நடிகராக நடித்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Aryan (@aryan_offl)






    இந்த ரோல் நல்ல ரீச் கொடுக்க, அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக கமிட் ஆனார். இந்த சீரியலில் இவரின் ஒருநாள் சம்பளம் ரூ.10,000 என்ற தகவலும் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் செழியனை காதலித்து கரம் பிடித்துள்ளார் ஷபானா. அப்பாவை ரோல் மாடலாக கொண்டு வாழும் இளைஞன்.நல்ல படிப்பு, வேலை பிடித்த பெண்ணுடன் திருமணம். ஆனால் அம்மாவைப் பற்றி சற்று கவலைப்படாத செல்ஃபிஷ் ரோலில் பாக்கியலட்சுமி சீரியலில் ஆர்யன் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கும் ஜெனிக்குமான காதல் காட்சிகள், கல்யாண சீன்கள் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்திருந்தது. இப்போது செழியனுக்கு நிஜமாகவே திருமணம் நடந்து முடிந்து விட்டது. மீடியா நண்பர்கள் பலரும் ஆர்யன் - ஷபானா ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இப்போது அடுத்ததாக ரசிகர்களுக்கு இன்னொரு கேள்வியும் மேலோங்கி இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் ஷபானா சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என்பது தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: