ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தல தீபாவளி கொண்டாடிய ஷபானா - ஆர்யன் ஜோடியை அரவணைத்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர்!

தல தீபாவளி கொண்டாடிய ஷபானா - ஆர்யன் ஜோடியை அரவணைத்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர்!

ஷபானா - ஆர்யன்

ஷபானா - ஆர்யன்

நடிகர் எம்.எஸ் பாஸ்கருடன் ஷபானா - ஆர்யன் தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்னத்திரை பிரபலங்களான ஷபானா - ஆர்யன் ஜோடி தங்களது தல தீபாவளியை விமர்சையாக கொண்டாடி இருக்கிறார்கள்.

  சின்னத்திரையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சின்னத்திரை ஜோடியாக வலம் வருபவர்கள் ஷபானா - ஆர்யன். செம்பருத்தி  சீரியல் மூலம் நடிகை ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் ஆர்யனை கரம் பிடித்தார். நடிகை ஷபானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு ஷபானா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோரை மீறி ஷபானா ஆர்யனை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் நண்பர்கள் உதவியோடு மிகவும் எளிமையாகவே நடந்தது.

  தாலி கழட்டி வச்சிட்டு நடிக்க மாட்டேன்.. சீரியல் நடிகையின் அதிரடி பதில்!

  திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது சினிமா கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஷபானா தொடர்ந்து செம்பருத்தி சிரியலில் நடித்து வந்த  நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியல் முடிவடைந்தது. தற்போது ஜோடி என்ற சீரியலில் ஷபானா லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் சன் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஆர்யன் தற்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார்.


  இருவரும் தற்போது பிஸியாக நடித்து வருவதால் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் செம்ம ஆக்டிவாக இருக்கின்றனர். அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள், நண்பர்களுடன் ட்ரிப் ஃபோட்டோக்களை இருவரும் இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிடுவார்கள். இந்நிலையில் தற்போது இவர்களின் தல தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


  பெற்றோர்கள் எதிர்ப்புடன் இருவரும் திருமணம் செய்து கொண்டதால் எல்லா விழா காலங்களிலும் பெரும்பாலும் இவர்கள் நண்பர்களுடன் தான் அந்த நாளை கொண்டாடுவார்கள். சமீபத்தில் ஓணம் பண்டிகையை ரேஷ்மாவுடன் செலபிரேட் செய்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் எம்.எஸ் பாஸ்கருடன் ஷபானா - ஆர்யன் தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர். இருவரையும் அரவணைத்தப்படி எம்.எஸ் பாஸ்கர் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கும் ஷபானா மிகவும் எமோஷனலாக கேப்ஷன் ஒன்றை கொடுத்துள்ளார்.

  அதில் ”யார் சொன்னது நாங்க தனியா தீபாவளி கொண்டாடுறோம்ன்னு எங்களுடன் எல்லா நேரங்களிலும் இருக்கும் நபர்.. நன்றி அப்பா” என குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Zee tamil