ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திவ்யா ஸ்ரீதருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்திய செவ்வந்தி சீரியல் டீம்!

திவ்யா ஸ்ரீதருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்திய செவ்வந்தி சீரியல் டீம்!

திவ்யா ஸ்ரீதர்

திவ்யா ஸ்ரீதர்

2017-ம் ஆண்டு கேளடி கண்மணி சீரியலில் உடன் நடித்த நடிகர் அர்னாவுக்கும், திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்த செவ்வந்தி சீரியல் குழுவினர், அவருக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். 

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். ’கேளடி கண்மணி’ எனும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், தொடர்ந்து சன் டிவி-யில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் நடித்திருந்தார். தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதே நேரத்தில் 2017-ம் ஆண்டு கேளடி கண்மணி சீரியலில் உடன் நடித்த நடிகர் அர்னாவுக்கும், திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். இதனை கடந்த செப்டம்பர் மாதம் தான் இன்ஸ்டகிராமில் அறிவித்தார் திவ்யா. அதோடு தான் கர்ப்பமாக இருப்பதையும் தெரியப்படுத்தினார். இதற்கிடையே தனது கணவர் அர்னாவ் தன்னுடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு இந்தப் பிரச்னை தீவிரமானது.

ஒருவழியாக டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டை தெரிந்துக் கொண்ட பாரதி... விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!

இருவரும் நேர்க்காணல்களில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே திவ்யா தன்னுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், 6 வயதில் குழந்தை இருக்கும் விஷயத்தை மறைத்ததாகவும் குற்றம் சாட்டினார் அர்னாவ். இந்தப் பிரச்னை அப்போது வைரலானது.
 
View this post on Instagram

 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் திவ்யா வீட்டுக்கு சர்ப்ரைஸாக சென்ற செவ்வந்தி சீரியல் குழுவினர், அவருக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். அந்த வீடியோவை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் திவ்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial