ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'45நாள் பேசல' ஹாஸ்பிடல் வாசலில் கதறி அழுத சீரியல் நடிகை திவ்யா!

'45நாள் பேசல' ஹாஸ்பிடல் வாசலில் கதறி அழுத சீரியல் நடிகை திவ்யா!

சீரியல் நடிகை திவ்யா

சீரியல் நடிகை திவ்யா

சிகிச்சைக்காக சென்ற திவ்யா, சிகிச்சை பெற்று வெளியே வந்து கண்ணீருடன் பேட்டி அளித்தார் .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரணவ் தன்னை கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டார், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் சின்னத்திரை நடிகை திவ்யா கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். 

சின்னத்திரை நடிகையான திவ்யாவை, சின்னத்திரை நடிகர் அரணவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள தன்னை மற்றொரு நடிகை உடன் தொடர்பில் உள்ள அரணவ் தன்னை அடித்து காயப்படுத்தி விட்டதாக கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா குற்றம்சாட்டினார்.

மனநல சிகிச்சை பெற்று வரும் திவ்யா ஸ்ரீதருக்கு என்னை பிளாக்மெயில் செய்வது வாடிக்கை - சீரியல் நடிகர் அர்னாவ்

சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற திவாய் ,  அரணவ் அளித்த புகாரில் விசாரணைக்கு போலீஸ் நிலத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது தரப்பில் உள்ள நியாயம் குறித்து அரணவ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை அடுத்த  வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நண்பர்களுடன் மீண்டும் சிகிச்சைக்காக சென்ற திவ்யா, சிகிச்சை பெற்று வெளியே வந்தவர் கண்ணீருடன் பேட்டி அளித்தார் .

அதில் தன்னை அரணவ் முஸ்லிமாக கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். இதற்கு தமிழகமுதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்னுடன் ஒரே வீட்டில் 45 நாட்கள் பேசாமல் இருந்தார். எனது செல்போன் நம்பரை பிளாக் செய்து விட்டார்.

எனது உடல் நலம் சரியான உடன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராவேன் .இது தொடர்பாகஅரணவின் பெற்றோர் கேட்க வேண்டும் அவர்களது குடும்ப வாரிசு எனது வயிற்றில் வளர்கிறது.தற்போது மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றேன்,  குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர் என கண்ணீர் மல்க பேட்டி அளித்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

நிரூபர் : சோமசுந்தரம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Sun TV, TV Serial, Vijay tv