பாவம் கணேசன் சீரியலில் இணைந்த 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' புகழ் நடிகை.!

நடிகை பிரியங்கா

நடிகை பிரியங்கா, தான் பாவம் கணேசன் சீரியலில் இணைந்துள்ளது தொடர்பாக அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவியில் தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில், "சுந்தரி நீயும் சுந்தரன் நானும் " சீரியல் புகழ் நடிகை பிரியங்கா புதிதாக இணைந்துள்ளார். இந்த தகவலை நடிகை பிரியங்கா தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து உள்ளார். பாவம் கணேசன் சீரியலில் யமுனா என்ற கேரக்டரில் இதற்கு முன் ஷயீமா ரியால்தீன் என்பவர் நடித்து வந்தார். இந்நிலையில் யமுனா வேடத்தில் நடிகை ஷயீமாவிற்கு பதிலாக தற்போது பிரியங்கா நடித்துள்ளார்.

பாவம் கணேசன் சீரியலில் யமுனாவாக பிரியங்கா நடித்துள்ள எபிசோட்கள் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டுள்ளன. சமீப நாட்கள் வரை யமுனா கேரக்டரில் நடித்து வந்த ஷயீமாவிற்கு பதிலாக பிரியங்கா மாற்றப்படுவது குறித்து எந்த தகவலும் ஆர்டிஸ்ட்கள் அல்லது சீரியல் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படவில்லை.

Also Read : சன் டிவி சீரியலில் நடிக்கும் அஜித் பட நடிகை - யார் தெரியுமா?

இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா, தான் பாவம் கணேசன் சீரியலில் இணைந்துள்ளது தொடர்பாக அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டு உள்ளார். இன்ஸ்டாவில் (Insta Story) தனது போட்டோவை ஷேர் செய்து அதனுடன் "யமுனாவாக மீண்டும் வந்திருக்கிறேன்" இரவு 10 மணிக்கு தவறாமல் பாருங்கள் "பாவம் கணேசன்" என்று சீரியலில் இணைந்துள்ள தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த தகவல் பார்த்து நடிகை பிரியங்காவின் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செக்ஷனில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். சிறிய இடைவெளிக்கு பின் "பாவம் கணேசன்"மூலம் மீண்டும் சின்னத்திரையில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நடிகை பிரியங்காவை வரவேற்று உள்ளனர்.

Also Read : சீனப்பெண் போல் இருப்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது - மௌன ராகம் சீரியல் நடிகை ஓபன் டாக்!

சின்னத்திரை நடிகை பிரியங்கா சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற காதல் மற்றும் காமெடி நிறைந்த சீரியலில் எழிலரசி கேரக்டரில் திறமை மற்றும் பாராட்டிற்குரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அப்துல் கபீஸ் இயக்கத்தில் வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து இருந்தனர். இந்த சீரியல் கடந்த மார்ச் மாதம் 405 எபிசோட்கள் ஒளிபரப்பான நிலையில் நிறைவடைந்தது.

இதனிடையே பிரியங்கா தற்போது இணைந்துள்ள பாவம் கணேசன் சீரியலில் கலக்கப் போவது யாரு புகழ் நவீன் கணேசன் கேரக்டரில் ஹீரோவாக நடித்து வருகிறார். குணவதி கேரக்டரில் நேஹா கவுடா , சித்ராவாக ஹாசினி, பிரியாவாக ஷிமோனா மரியா ஜேம்ஸ், சுதீஷாக ஜே எஸ்.கே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பாவம் கணேசன் சீரியல் இந்த ஆண்டு ஜனவரி 4 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் 100 எபிசோட்களை நிறைவு செய்தது இந்த சீரியல் ஈர்க்க கூடிய கதைக்களத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: