லாக்டவுனில் சாலையோரவாசிகளுக்கு உதவும் சன் டிவி சீரியல் நடிகை

சீரியல் நடிகை பரதா

கொரோனா ஊரங்கால் பாதிப்படைந்துள்ள சாலையோர வாசிகளுக்கு தாலாட்டு சீரியல் நடிகை பரதா, உணவளித்து உதவி செய்து வருகிறார்.

  • Share this:
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால், ஹோட்டல்கள், சாலையோர உணவகங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் சாலையோரம் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் உணவு சமைத்து இலவசமாக வழங்கி வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் நடித்து வரும் பரதாவும், தன்னால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகிறார். சாலையோரம் உணவில்லாமல் தவித்து வருபவர்களுக்கு உணவளித்து வரும் அவர், அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தர்மம் தலைக்காக்கும், தர்மம் செய், பிறர் விரும்பச் செய், விரும்பி செய் எனக் கூறியுள்ளார்.

Also Read : தனித்தீவில் 100 நாள்கள் - பிக் பாஸுக்கு போட்டியாக முன்னணி தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி

தாலாட்டு சீரியலில் கோகிலா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அவர், சூட்டிங் தடைபட்டிருப்பதால் சமூகசேவையில் இறங்கியுள்ளார். மேலும், மேக்கப் ஸ்டுடியோ ஒன்றையும் தொடங்கி, கவனித்து வருகிறார். பரத் என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பரதா, செம்பருத்தி சீரியலில் மித்ராவாக கலக்கினார். தேவதையைக் கண்டேன் மற்றும் யாரடி நீ மோகனி சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். பரதாவைப்போல் மற்ற சின்னத்திரை பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர்.

Also Read : குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் நடந்த விசேஷம்!

செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை நடிகை சரண்யா சுந்தர்ராஜ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து, தானே இருசக்கர வாகனத்தில் சென்று கொடுத்து வருகிறார். முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் Shore Women Society என்ற பக்கத்தை உருவாக்கிய அவர், அந்த பக்கத்தில் உதவி கேட்பவர்களுக்கு உடனடியாக அதனை செய்து கொடுக்கிறார். இது குறித்து அவர் பேசும்போது, சாலையோரம் மற்றும் ஆதவற்றவர்களுக்கு உணவு கிடைக்காது என பலரும் நினைக்கும் அதேவேளையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம், வீட்டில் தனியாக வசித்து வரும் வயதான முதியவர்கள் ஆகியோரும் உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்தார்.




கடந்த ஊரங்கு காலத்தில் வீட்டில் இருந்தநிலையல், தற்போது பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதாக கூறுகிறார். உதவி கேட்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யும்நோக்கில் தண்டையார்பேட்டையில் வசிக்கும் சில மீனவ பெண்கள் தனக்கு உதவியாக இருப்பதாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களின் உதவியுடன் தேவையானவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து வருவதாக சரண்யா சுந்தர்ராஜ் தெரிவித்தார். தாங்கள் சமைக்கும் உணவில் தரம் எந்த வகையிலும் குறையக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த சரண்யா, கணவரின் ஒத்துழைப்புடன் இந்த உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.
Published by:Vijay R
First published: