Home /News /entertainment /

பிரிந்த குடும்பத்தை சேர்க்கும் தனம்.. வீட்டை விட்டு வெளியேறும் மூர்த்தி! - பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று

பிரிந்த குடும்பத்தை சேர்க்கும் தனம்.. வீட்டை விட்டு வெளியேறும் மூர்த்தி! - பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்டில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, தனம் மூர்த்தியின் பேச்சை மீறி கண்ணன் - ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழத்து செல்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணி எடுக்கும் முக்கியமான முடிவு தான் சீரியலின் அதிரடி திருப்பமாக அமைந்துள்ளது. தனத்தின் இந்த முடிவால் மூர்த்தி வீட்டை விட்டு வெளியேறுவது யாரும் எதிர்பார்க்காத அடுத்த ட்விஸ்ட்.

    ஃபேமலி ஆடியன்ஸை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. வீட்டை விட்டு வெளியேறிய கண்ணனை மீண்டும் குடும்பத்துடன் சேர்க்க துடிக்கும் தனம் அண்ணி, அதற்கான முதல் படியாக மூர்த்தியை மீறி ஒரு முடிவை எடுக்கிறார். மீனாவின் அப்பா கடையில், பணம் திருட போன விஷயம் இவை அனைத்துக்கும் காரணமாகி விட்டது. திருடாத பணத்தை திருடி விட்டதாக கண்ணன் மீது பழி சுமத்த அந்த பழியை மீனா சரிசெய்து வைக்க பிரச்சனை முடிந்து விட்டதாக மொத்த குடும்பமும் பெருமூச்சு விடுகிறது.

    ஆனால் அதற்குள் கதிர், புது பிரச்சனையை கொண்டு வருகிறார். கண்ணன் மீது பழியை போட்ட ராஜ்குமாரை ரோட்டில் வைத்து அடிக்க, கோபத்தில் ராஜ்குமார் கண்ணனை அடியாட்கள் வைத்து அடித்து விடுகிறார். மயங்கி விழுந்த கண்ணனை, ஜீவாவும் கதிரும் ஆஸ்பிட்டலுக்கு தூக்கி சென்று, கை, கால்களில் கட்டுக்கட்டி வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். முதன் நாள் என்பதால் மூர்த்தியும் எதும் சொல்லாமல் கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டுக்குள் சேர்கிறார்.

    தம்பி அடிப்பட்டதை தாங்க முடியாமல், கோபத்தில் கதிர் பதிலுக்கு போய் எல்லோரையும் அடித்து தும்சம் செய்கிறார். ஆனால் இந்த விஷயம் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. அடுத்த நாள் ஆகியும் கண்ணன் வீட்டுக்கு போகாததால் மூர்த்தியின் முகம் மாறுகிறது. இதை புரிந்து கொண்டு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டுக்கு கிளம்புகிறார்கள். ஆனால் தனத்தால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று இரவே மூர்த்தியிடம் சண்டையும் போடுகிறார். ஆனால் மூர்த்தி மனம் மாறுவதாக தெரியவில்லை. நேற்று வரை இந்த எபிசோடு ஒளிப்பரப்பானது.



    இன்றைய எபிசோட்டில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, தனம் மூர்த்தியின் பேச்சை மீறி கண்ணன் - ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழத்து செல்கிறார். மீனா, முல்லை என எல்லோரும் வாயடைத்து போகிறார்கள். மூர்த்தி கோபத்தின் உச்சத்துக்கே செல்கிறார். கண்ணனுன் ஐஸ்வர்யாவும் வீட்டுக்குள் வர, மூர்த்தி வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த திருப்பத்தையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எதிர்பார்க்கவில்லை. இனி அடுத்து நடக்க போவது என்ன? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி