Home /News /entertainment /

கதிரின் அவசரத்தால் கண்ணனின் உயிருக்கே ஆபத்து.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் பரபரப்பு!

கதிரின் அவசரத்தால் கண்ணனின் உயிருக்கே ஆபத்து.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் பரபரப்பு!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணன், கடையில் பணத்தை திருடி விட்டதாக விரட்டியடிக்கப்பட்டதில் இருந்து மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த பரபரப்பாக கதிரின் அவசரத்தால் கண்ணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் இந்த வார எபிசோடு பல திருப்பங்களுடன் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய மிகக் குறைந்த நாட்களிலேயே பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து  ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. சமீபகாலமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கண்ணன் கல்யாணம் தொடங்கி, லட்சுமி அம்மா மரணம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சீரியல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பின்பு இடையில் கதையில் தொய்வு ஏற்பட, சீரியல் ரூட் மாறியது. இந்நிலையில் கண்ணன், கடையில் பணத்தை திருடி விட்டதாக விரட்டியடிக்கப்பட்டதில் இருந்து மீண்டும் கதை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

    வீட்டில் இருக்கும் அனைவரும், மூர்த்தி உட்பட எல்லோருக்கும் கண்ணன் மீது கோபம் குறைய தொடங்கி விட்டது. குட்டி அண்ணி மீனா, கண்ணனுக்காக தனது அப்பாவிடமே சண்டை போட்டு உண்மையை வெளியில் தெரிய வைத்தார். கதிரும், ஜீவாவும் கண்ணனை நேராக அழைத்து இதை பற்றி பேசுகிறார்கள். இப்படி இருக்க,  வரும் நாட்களில் சீரியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறவுள்ளன. மீனாவின் அப்பா கடையில் பணத்தை திருடும், விஜயகுமார்,  ரவுடி ஆட்கள் வைத்து கண்ணனை அடிப்பது தான் சீரியலில் நாளை நிகழ இருக்கும் அதிரடி திருப்பம்.

    விஜயகுமாரின் இந்த கோபத்துக்கு கதிர் தான் மூல காரணம். அதாவது, கதிர், விஜயகுமாரிடம் சண்டைக்கு போக, பதிலுக்கு கதிர் அவரை அடித்து விடுகிறார். கண்ணனனை பார்த்து தாப்பாக பேசியதால் தான் இந்த சண்டையே வெடிக்கிறது. இது இப்படி இருக்க, விஜயகுமாருக்கு கதிர் மீது கோபம் தலைக்கு ஏறுகிறது. இந்த கோபத்தை அப்படியே கண்ணன் மீது காட்டுகிறார். தனியாக இருக்கும் சமயம் 4 அடியாட்களை கூடிட்டு போய் கண்ணனை வெறியுடன் அடித்து போடுகிறார். ரோட்டில் பலத்த காயங்களுடன் கண்ணன் விழுந்து கிடக்கிறார்.



    இதைப்பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ரியாக்‌ஷன் என்ன,  அம்மா வீட்டுக்கு போகும் தனம் திரும்பி வந்துவிடுவாரா? என  அடுத்து சீரியலில் என்னென்ன திருப்பங்கள் அரங்கேற போகிறது என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி