• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புது திட்டம்... கண்ணன் - ஐஸ்வர்யா வீட்டுக்கு வரும் கஸ்தூரி அத்தாச்சி!

புது திட்டம்... கண்ணன் - ஐஸ்வர்யா வீட்டுக்கு வரும் கஸ்தூரி அத்தாச்சி!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சகஜமாக பேசுவது போல் பேசி, கஸ்தூரி அத்தாச்சி வீட்டை நோட்டம் விடுகிறார்

  • Share this:
    கண்ணன் - ஐஸ்வர்யாவை கண்டாலே பிடிக்காது போல் இருக்கும் கஸ்தூரி அத்தாச்சி இன்று புது திட்டத்துடன் கண்ணன் - ஐஸ்வர்யாவை தேடி சென்று பார்க்கிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பம் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளனர். கடந்த 2 வாரமாக சோகத்தின் விளிம்பாக சென்ற இந்த தொடரில் இப்போது கதை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதுவும் கண்ணன் - ஐஸ்வர்யாவால் தான். நேற்றைய தினம் குல தெய்வம் கோயிலுக்கு விளக்கு ஏற்ற செல்ல மூர்த்தி குடும்பத்தினர் கண்ணனையும் அழைக்கிறார்கள். மீனா அப்பா மூலம் தகவல் சொல்லப்படுகிறது. ஆனால் கண்ணன் செல்ல தயங்குகிறான். அதற்கு காரணமும் இருக்கிறது.

    இந்நிலையில் இன்று வீட்டுக்கு வரும் மூர்த்தி, ஜீவா, கதிரிடமும் கோயில் போவது குறித்து தனம் சொல்கிறார். அதே போல் கண்ணன் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டு இருப்பதாக தனம் சொல்ல, உடனே ஓகே சொல்கிறார் மூர்த்தி. இதைப் பார்த்ததும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமில்லை கண்ணன் மீது மாமாவுக்கு கோபம் குறைந்து வருவதாக மீனா எடுத்துவிட கதிரும், ஜீவாவும் அதற்கான காரணத்தை நினைத்து மனதளவில் சந்தோஷப்படுகிறார்கள். பொழுது விடிந்ததும் கண்ணனிடம், கோயிலுக்கு போவது பற்றி ஐஸ்வர்யா பேச்சு எடுக்கிறாள். அப்போது தான் என்றைக்கும் இல்லாத திருநாளாக கஸ்தூரி அத்தாச்சி கண்ணன் ஐஸ்வர்யாவை பார்க்க வீட்டுக்கே வருகிறார்.

    இருவருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியாமல் முழிக்கிறார்கள். சகஜமாக பேசுவது போல் பேசி, கஸ்தூரி அத்தாச்சி வீட்டை நோட்டம் விடுகிறார். இருவரும் கடையில் வேலை செய்வதை பற்றியும் பேச்சு எடுக்கிறார். கண்ணனுக்கு கஸ்தூரி அத்தாச்சி ஏதோ திட்டத்துடன் தான் வந்திருப்பதாக சந்தேகம் வருகிறது. இந்த பக்கம் மூர்த்தி குடும்பம் கோயிலுக்கு தயாராகி நிற்கிறார்கள். ஆனால் கார் வரவில்லை. மீனா எதோ ஞாபகத்தில் போன முறை கோயிலுக்கு கண்ணன் வந்ததை பற்றி பேச்சு எடுக்க, மூர்த்திக்கு இந்த முறை கோபம் வந்து விடுகிறது. இதனால் அனைவரின் முகமும் மாறி விடுகிறது. கடைசி வரை கார் வராததால் தனம் குட்டி யானையில் செல்ல ஆசைப்படுகிறாள். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் வண்டியான குட்டி யானையில் செல்ல வேண்டும் என தனம் அடம் பிடிக்க, வேறு வழியில்லாமல் தனத்தின் ஆசையை நிறைவேற்ற ஜீவா வண்டி ஓட்ட, மொத்த குடும்பமும் குட்டி யானையில் குல தெய்வ கோயிலுக்கு கிளம்புகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: