• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வந்த முதல் நாளே இப்படியா? ஐஸ்வர்யாவின் மாற்றத்தால் ஷாக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

வந்த முதல் நாளே இப்படியா? ஐஸ்வர்யாவின் மாற்றத்தால் ஷாக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஐஸ்வர்யாவுக்கு புது வீட்டுக்கு போவதில் விருப்பம் இருப்பதை கண்ணன் புரிந்து கொள்கிறான்

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி அதிர்ச்சி மேல் கொடுத்து வருகிறார். 

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது புது திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று கஸ்தூரி அத்தாச்சி பேச்சை கேட்டு  ஐஸ்வர்யா தவறான ரூட்டில் செல்வது. மூர்த்தி குடும்பத்துடன் சேர்த்து வைப்பதாக சித்தி சொன்னதை நம்பி ஐஸ்வர்யா தவறான முடிவுகளை எடுத்து வருகிறார். இன்றைய எபிசோடிலும் அதுதான் நடக்கிறது. மல்லியின் பேச்சால் முல்லை சண்டைப்போட்டு விட்டு, விருவிருவென கிளம்புகிறாள். அதே கோபத்தில் வீட்டுக்கு போய் நடந்ததை எல்லோரிடமும் சொல்கிறாள். மல்லியின் பேச்சு தனம், மூர்த்திக்கும் கோபத்தை தருகிறது. அதுமட்டுமில்லை இனிமே அம்மா மருத்துவ செலவுக்கு உதவ வேண்டாம் என்றும் முல்லை கரார்ராக சொல்லிவிடுகிறாள். அப்போது கயல் பாப்பா முதன்முறையாக நடந்து வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறாள். இன்னும் சில மாதங்களில் கயல் பாப்பாவுக்கு பிறந்த நாள் வேற வரப்போகுது.

    அடுத்தது, கண்ணனும் ஐஸ்வர்யாவும் புது வீட்டுக்கு போவதை பற்றி பேசுகிறார்கள். ஐஸ்வர்யாவுக்கு புது வீட்டுக்கு போவதில் விருப்பம் இருப்பதை கண்ணன் புரிந்து கொள்கிறான். எனக்கு விருப்பமில்லை என்றாலும் உனக்காக வருகிறேன் என்கிறான். இருவரும் கூடிய விரைவில் குடும்பத்துடன் சேர போவதை எண்ணி சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் நடக்க போவது வேற..

    காலை விடிகிறது. புது வீட்டில் கோலம் போட்டப்படி மூர்த்தி வீட்டைப் பார்க்கிறாள் ஐஸ்வர்யா. யாராவது வந்தால் நம்மளை பார்த்து ஷாக் ஆவார்கள் என ஆர்வமாக இருக்கிறாள். தூக்கத்துடன் வாசலை திறக்கும் மீனா வழக்கம் போல் புலம்பி கொண்டே வேலை செய்கிறாள். மீனாவை திரும்பி பார்க்க வைக்க, “மீனம்மா” பாடலை ஐஸ்வர்யா பாட உடனே மீனா யாருன்னு பார்க்க, அது ஐஸ்வர்யா. ஷாக்கில் மீனா ஓடிப்போயி தனத்தை கூடிட்டு வருகிறாள். வந்து பார்த்த தனத்திற்கும் ஷாக்.

    காலியாக இருந்த புது வீட்டுக்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் தான் வந்து இருக்கிறார்கள் என்பது தனத்திற்கு புரிந்து விடுகிறது. இனி நடக்க போற வேடிக்கையை மட்டும் பாருங்க.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: