Home /News /entertainment /

TRP ரேட்டிங்கில் விஜய் டிவிக்கு ஷாக் கொடுத்த சன் டிவி..

TRP ரேட்டிங்கில் விஜய் டிவிக்கு ஷாக் கொடுத்த சன் டிவி..

சீரியல்கள்

சீரியல்கள்

தமிழ் டிவி ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளை போட்டி போட்டு கொண்டு டெலிகாஸ்ட் செய்து வருகின்றன டிவி சேனல்கள்.

தமிழ் டிவி ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளை போட்டி போட்டு கொண்டு டெலிகாஸ்ட் செய்து வருகின்றன டிவி சேனல்கள். வித விதமாக எண்ணற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டாலும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருப்பது 2 வகை நிகழ்ச்சிகள் தான்.

ஒன்று கலகலப்பான ரியாலிட்டி ஷோக்கள், இன்னொன்று சீரியல்கள். சின்னத்திரை நட்சத்திரங்களை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்குவதில் சீரியல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரபல டிவி சேனல்கள் எலலவற்றிலும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனி வரை தினமும் சீரியல்கள் ஒளிபரப்படுகின்றன.

பல சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்புவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினாலும் நேரடி போட்டி என்னவோ ரசிகர்களின் அபிமானம் பெற்ற 2 சேனல்களுக்கு மத்தியில் தான். ஆம், சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி தான் அந்த 2 சேனல்களும். வித்தியாசமான கதைகள் மற்றும் விறுவிறுப்பான எபிசோட்கள் மூலம் மக்கள் மனத்தை கவரும் வகையில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் இந்த 2 சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவி-யில் காலை முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி 2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா, உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

also read :அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

sundari serial cast Gabrella Sellus instagram

இதே போல ஸ்டார் விஜய் டிவி-யில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

also read : எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பாலாக்குள்ள இப்படி ஒரு கஷ்டமா!

கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என பல சேனல்களில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி ஆகிய 2 சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் பெரும்பாலும் TRP ரேட்டிங் லிஸ்ட்டில் டாப் 10 இடங்களில் இருக்கும்.

இதில் டாப் 5 லிஸ்ட்டில் குறைந்தபட்சம் இந்த சேனல்களின் 2 சீரியல்களாவது மாறி மாறி இடம் பெற்றுவிடும். இந்நிலையில் தமிழ் சீரியல்களின் கடந்த வார TRP ரேட்டிங் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் அதிர்ச்சி தர கூடிய விஷயம் என்னவென்றால், டாப் 5 லிஸ்ட்டில் விஜய் டிவி-யின் ஒரே ஒரு சீரியல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதுவும் 5-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய TRP ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை பிடித்த சீரியல்களின் பட்டியல் கீழே..

kayal 24 march episode suntv kayal serial periyappa

பல வாரங்களாக முதலிடத்தில் உள்ள சன் டிவியின் கயல் சீரியல் தொடர்ந்து இப்போதும் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாமிடத்தில் சுந்தரி, மூன்றாம் இடத்தில் வானத்தை போல, நான்காம் இடத்தில் ரோஜா உள்ளிட்ட சன் டிவி சீரியல்கள் உள்ளன. டாப் 5 லிஸ்ட்டில் 5-ஆம் இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: TV Serial, Vijay tv

அடுத்த செய்தி