முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒட்டு மொத்த சின்னத்திரை பிரபலங்களுக்கும் இவர் மீது அப்படி ஒரு மரியாதை.. யார் இந்த விஜய் டிவி பிரவீன் பென்னெட் ?

ஒட்டு மொத்த சின்னத்திரை பிரபலங்களுக்கும் இவர் மீது அப்படி ஒரு மரியாதை.. யார் இந்த விஜய் டிவி பிரவீன் பென்னெட் ?

விஜய் டிவி பிரவீன் பென்னெட்

விஜய் டிவி பிரவீன் பென்னெட்

சமீபத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘நம்ம வீட்டு பொண்ணு’ என்ற மூன்றாவது சீரியலின் இயக்குனரும் பிரவீன் பென்னெட் தான்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

திரைப்படங்களைப் போல அல்லாது, சீரியல்களில் நடிப்பவர்கள் நீண்டகாலம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது. ஒரு சில சீரியல்கள் ஆண்டுக்கணக்காக நீளும். இதனால் சீரியலில் ஒன்றாக பணியாற்றுபவர்களுக்கிடையே காதல் மட்டுமில்லாது, அவர்களுக்குள்ளே அழகான நட்பும், குடும்பம் போன்ற உறவுகளும் ஏற்படுகிறது. சீரியலில் உள்ள உறவுகளைப் போலவே, தங்கள் சொந்த வாழ்க்கையிலும் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளும் அழகான நட்பையும் உறவையும் வளர்த்து வருகின்றனர். பல்வேறு சீரியலில் நடிப்பவர்கள் தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள்.

இது ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் பிரபலங்களுக்கும் பொருந்தும். இவர்களில் பல நடிகர்களோடு நடிகைகளோடு குடும்பத்தைப் போன்ற உறவுகளையும், பெரிய நட்பு வட்டத்தையும் கொண்டவர்களில் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான இயக்குனரான பிரவீன் பென்னட்டும் ஒருவர்.

நடிகரின் அம்மாவை பழிவாங்கியது முதல் முகப்பருக்காக விலக்கப்பட்ட ஹீரோயின் வரை... சின்னத்திரை சந்தித்த சர்ச்சைகள்!

வீட்டில் ஏதாவது விசேஷம் நடந்தால் நண்பர்கள் படைசூழ ஆஜராகி விடுவது போல இவர்கள் அனைவரும் ஆஜர் ஆகி விடுவது வழக்கம். சமீபத்தில் சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான இயக்குனர் பிரவீன் பென்னட் மகனின் இரண்டாவது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில் அனைத்து சீரியல் பிரபலங்களும் ஆஜராகியுள்ளனர்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது ஷேர் செய்யப்பட்டு வருகிறது. எல்லா நடிகர் நடிகைகளுக்கும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்வது மிகப்பெரிய நட்சத்திர பார்ட்டியை போல அவ்வளவு சுவாரசியமாக இருக்கும். சீரியல்களை விட, சிலருக்கு சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களும் வரவேற்பும் உள்ளன. அதுமட்டுமில்லாமல், பிரபலங்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது.

ஒரு காலத்துல எப்படி இருந்த கதை.. இப்ப நிஷாவை நம்பி பாரதி கண்ணம்மா சீரியல்!

ஒரு நட்சத்திர கூட்டமே கலந்து கொண்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஒரே இடத்தில் அனைவரும் கூடி ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் பல்வேறு சீரியல்களை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் சீரியல்கள் எல்லாவற்றையும் இயக்குவது பிரவீன் பென்னெட் தான்.
 
View this post on Instagram

 

A post shared by Praveen Bennett (@praveen.bennett)அது மட்டுமின்றி, சின்னத்திரையில் திரையில் எப்போதுமே பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீரியல்களின் இயக்குனராக பிரவீன் பென்னெட் இருந்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட்டான சீரியல்களில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியலையும் பிரவீன் தான் இயக்கி வருகிறார். அது மட்டுமின்றி, சமீபத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘நம்ம வீட்டு பொண்ணு’ என்ற மூன்றாவது சீரியலின் இயக்குனரும் பிரவீன் பென்னெட் தான்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் கிளாசிக் சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலின் இயக்குனராக ரசிகர்கள் மனதில் நிரந்தரமான இடம் பெற்றார். அதற்கடுத்ததாக இவருடைய சூப்பர் ஹிட் சீரியல் ராஜா ராணி. மேலும், கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பான காலத்திலேயே இயக்குனர் குழுவில் பணியாற்றி வந்துள்ளார் அப்போது தான் காணும் காலங்கள் சீரியலில் நடித்த சாய் பிரமோதித்தாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் இயக்குனர் பிரவீன்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv