நாங்கள் இனி கணவன் - மனைவி இல்லை: ஷாக் கொடுத்த டிவி பிரபலம்

சையத் அன்வர் - சமீரா

பிரபல சீரியல் ஜோடியான சமீரா ஷெரீஃப் மற்றும் சையத் அன்வர் தாங்கள் இனியும் கணவன் - மனைவி இல்லை என தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  பிரபல சீரியல் ஜோடியான சமீரா ஷெரீஃப் மற்றும் சையத் அன்வர் தாங்கள் இனியும் கணவன் - மனைவி இல்லை என தெரிவித்துள்ளனர்.

  பிரபல தொலைக்காட்சி ஜோடிகளான சமீரா ஷெரீஃப் மற்றும் சையத் அன்வர் ஆகியோர் விரைவில் பெற்றோராகப் போகிறார்கள். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நாங்கள் இனி கணவன் - மனைவி இல்லை, எல்லாவற்றிற்கும் எப்போதும் ஒரு முடிவு இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

  அந்த வீடியோவில், தம்பதியினர் ‘நாங்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறோம்..’ மற்றும் ‘குழந்தை வந்துக் கொண்டிருக்கிறது’ ஆகிய தலைப்பிலான டி-சர்ட்டுகளை அணிந்திருப்பதைக் காண முடிந்தது. இதைக் கேள்விப்பட்ட சமீரா ஷெரீஃப் மற்றும் சையத் அன்வர் ஆகியோரின் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வீடியோவுக்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பதற்காக நெட்டிசன்கள் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.  சமீரா ஷெரீஃப் மற்றும் சையத் அன்வர் ஆகியோர் சக்தி மற்றும் பிரபாகரன் கதாபாத்திரங்களில் பகல் நிலவு என்ற ரொமாண்டிக் சீரியலில் திரையைப் பகிர்ந்துக் கொண்டனர். அந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே காதலில் இருந்த அவர்கள், தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, 2019 நவம்பரில் திருமணம் செய்துக் கொண்டனர்.

  நாகபாபு மற்றும் நவ்தீப் ஆகியோர் ஜட்ஜாக இருந்த ’ஆதிரிந்தி’ என்ற தெலுங்கு நகைச்சுவை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார் சமீரா. அதற்கு முன்பு, தெலுங்கில் ஆடபில்லா, அபிஷேகம், பாரயாமணி, மூடு முல்லா பந்தம், பிரதிபிம்பம் மற்றும் மங்கம்மா காரி மனவரலு ஆகியவற்றில் நடித்திருந்தார். தமிழில், றெக்க கட்டி பறக்குது மனசு சீரியலில் நடித்து பிரபலமானார் சமீரா.

  சையத் அன்வர், சரவணன் மீனாட்சி (ஜீவாவாக), பிரிவோம் சாந்திப்போம் (பிரபுவாக), தாயுமானவன் (அசோக்) மற்றும் றெக்க கட்டி பறக்குது மனசு (அருணாசலம்) என சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, றெக்க கட்டி பறக்குது மனசு மற்றும் பொன்மகள் வந்தால் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்த ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளரும் கூட. சமீரா மற்றும் சையத் ஆகியோர் தமிழ் ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: