நடிகை ஆலியா மானசாவை சீண்டிய சஞ்சீவ் - வைரலாகும் கியூட் வீடியோ!

ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்

தற்போது ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்றில், இருவரும் நடனமாடிய அழகிய காட்சிகள் சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது.

  • Share this:
சின்னத்திரையின் பிரபலமான நடிகரான சஞ்சீவ் கார்த்திக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். ராஜா ராணி சீரியல் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி, நிஜ வாழ்விலும் ஒன்று சேர்ந்தது. இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சஞ்சீவும், ஆல்யாவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வார்கள். இதற்காகவே, இவர்களுக்கு மிகப்பெரியர் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் இவர்கள் இருவரும் ஷாப்பிங் சென்றது , புதிய கார் வாங்கியது, தங்களது திருமணம் குறித்து விளக்கியது, மற்றும் இவர்களின் குழந்தையுடன் விளையாடும் கியூட்டான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சீவ் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் பெற்றது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்த அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றி கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



 




View this post on Instagram





 

A post shared by RajaRani (@rajarani.offl)






இந்தநிலையில் தற்போது ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்றில், இருவரும் நடனமாடிய அழகிய காட்சிகள் சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உன் செய்கை ஒவ்வொன்றும் பாடலுக்கு ஆல்யா தனியான நடனமாடிக்கொண்டிருக்கும்போது, சஞ்சீவ் வீடியோவின் நடுவே வந்து செல்கிறார். இதனால் கடுப்பாகும் ஆல்யா கோபத்துடன் நிற்க, இதை பார்த்த சஞ்சீவ் அவருக்கும் முத்தம் கொடுத்து சமாதானப்படுத்துகிறார். உடனே ஆலியா சிரிக்கும் காட்சிகள் அடங்கியுள்ளது. இதேப்போல மற்றொரு வீடியோ ஒன்றில் ஆலியா ரோட்டில் நின்று போஸ் கொடுக்க அதனை சஞ்சீவ் போட்டோ எடுக்கும் காட்சிகள் உள்ளது. நடு இரவில் இந்த சம்பவம் நடப்பது போல தெரிகிறது. இந்த வீடியோவையும் அவர்களது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Also read... 200 எபிசோட்களை கடந்த பிரபல சீரியல்? கேக் வெட்டி கொண்டாடிய கலர்ஸ் தமிழ் சீரியல் குழு!

சஞ்சீவ் ராஜா ராணி சீரியல் முடிந்தவுடன், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலேயே, காற்றின் மொழி என்ற மற்றொரு சீரியலில் கதாநாயகனாக நடித்தார். தொலைகாட்சி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் சஞ்சீவ் கார்த்திக், வெள்ளித்திரையில் முதலில் அறிமுகமானார். குளிர் 100 டிகிரி என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அடுத்ததாக சன் தொலைக்காட்சியில் நடிக்கவிருப்பதாக சஞ்சீவ் அறிவித்திருந்தார். தற்போது ஆலியா மானசா ராஜா ராணி 2ல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில் படித்த பெண்ணான சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆலியா, படிக்காத சரவணன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர் அவருக்கு ஏற்படும் அந்த கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என குறித்து கதை நகர்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published: