முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அவர் எங்களை விட்டு சென்று விட்டார்.. கண்ணீர் விட்டு அழுத பிரபல சீரியல் நடிகை!

அவர் எங்களை விட்டு சென்று விட்டார்.. கண்ணீர் விட்டு அழுத பிரபல சீரியல் நடிகை!

சீரியல் நடிகை ஜெனிஃபர்

சீரியல் நடிகை ஜெனிஃபர்

சீரியல் நடிகை ஜெனிஃபர் அழுதப்படியே தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :

சீரியல் நடிகை ஜெனிஃபர் தனது தந்தையின் மறைவு செய்தியை அழுதபடியே இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

வெள்ளித்திரையில் நந்திதா ஜெனிஃபர் என்ற பெயரால் அறிப்பட்டவர் நடிகை ஜெனிஃபர். இவரின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சின்னா. கமல், ரஜினி என மெகா ஸ்டார்களுடன் பணியாற்றியுள்ளார். இவரின் மகளான ஜெனிஃபர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற ரோலில் நடித்து வந்தார். இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தினால் சீரியலில் இருந்து விலகியவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மீண்டும் இவரின் ரீ என்ட்ரி குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தியை பகிர்ந்துள்ளார் ஜெனி.

தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகார் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இளம் வயதிலேயே மீடியாவில் நுழைந்த ஜெனிஃபர். நடிகை, டான்ஸர் என பன்முகம் கொண்டவர். இவருக்கு சினிமா மீது ஆசை வர காரணமே அவரின் அப்பா சின்னா மாஸ்ட்ர தான். அப்பா கோரியோகிராஃபர் என்பதால அவர் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றவர்,  ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு அசிஸ்டென்ட் கோரியோகிராஃபராக மாறினார். பல மேடைகளில் ஜெனிஃபர் தனது அப்பா பற்றி பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில், அவரின் அப்பாவான மாஸ்டர் சின்னா இன்று இயற்கை எய்தினார். இந்த செய்தி நடன கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுக் குறித்து அழுதப்படியே தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ள ஜெனிஃபர், “அப்பாவின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் எங்களை விட்டு சென்று விட்டார். வயதான பிறகு எல்லோரும் சந்திக்கும் அதே உடல் பிரச்சனைகளை தான் அவரும் சந்தித்தார். ஒருகட்டத்தில் அவரால் முடியவில்லை. இன்று எங்களை விட்டு பிரிந்து விட்டார். இந்த செய்தியை கேள்விப்பட்டு பலரும் எனக்கு ஃபோன், மேசேஜ் செய்கிறீர்கள். என்னால் பதில் அளிக்க முடியவில்லை சாரி. என் அப்பாவுக்காக பிராத்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” என கண்ணீருடன் பேசியுள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Vijay tv