முதல் திருமணத்தை மறைத்ததால் சின்னத்திரை நடிகை வீட்டில் அடிதடி

சீரியல் நடிகை ஜெனிபர்

சின்னத்திரை நடிகை ஒருவர் தனது காதலரிடம் முதல் திருமணத்தை மறைத்ததால் இரு குடும்பத்தாருக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

  • Share this:
மணலி பல்ஜிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் வயது 24 இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு 2019-ம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணமாகி உள்ளது. ஆனால் இருவரும் பிரிந்துவிட்டதால் விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில் ஜெனிபர் தொடரில் பணியாற்றும் உதவி இயக்குனர் நவீன் குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ஜெனிபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து வழக்கு நடந்து வருவதை மறைத்ததாக கூறி நவீன்குமார் ஜெனிபர் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது ஜெனிபர் அவரை திட்டி அனுப்பி உள்ளார். சற்று தொலைவில் அவர் நின்று கொண்டிருந்தபோது ஜெனிபர் அப்பா பெரியநாயகம் அவரது மகன் ஆகியோர் நவீன்குமாரிடம் ஏன் தகராறு செய்தாய் என கேட்டுள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் பெரியநாயகத்திற்கு தெரிந்தவர் ரவிகுமாரை முகத்தில் குத்தியுள்ளார்.

இதனால் நவீன்குமார் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு தனது தந்தையான உதயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உதயகுமார் நான்கு பேருடன் மாலை ஜெனிபர் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது இருதரப்புக்கும் அடிதடி நடந்துள்ளது.இருதரப்பிலும் கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக இருவரும் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Published by:Sheik Hanifah
First published: