சகோதரியின் பிறந்த நாளை ஸ்பெஷலாக கொண்டாடிய அம்மன் சீரியல் நடிகை.. வைரல் வீடியோ!

வைகா - ரம்யா ஜோசப்

பிறந்தநாள் கொண்டாடிய ரம்யாவுக்காக சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பெரிய கேக்குகளை வைகா கொண்டு வந்துள்ளார்.

 • Share this:
  சீரியல் நடிகை ரம்யா ஜோசப் சமீபத்தில் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். ஒரு சகோதரியாக சீரியல் நடிகை வைகா தனது சகோதரி ரம்யாவிற்கு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளார். மேலும், அந்த ஸ்பெஷல் செலிபரேஷன் வீடியோவை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்து கொண்டார்.

  பிறந்தநாள் கொண்டாடிய ரம்யாவுக்காக சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பெரிய கேக்குகளை வைகா கொண்டு வந்துள்ளார். ரம்யா தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டும் விழாவையும் வைகா அரேன்ஞ் செய்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துகொண்ட வைகா குறிப்பிட்டிருந்ததாவது, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் @remyaa_joseph.

  கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். இந்த ஆண்டு சிறந்த வாய்ப்புகளும் மகிழ்ச்சியும் நிறைய எனது வாழ்த்துக்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி. எங்களுக்கெல்லாம் நீங்கள் உண்மையான பரிசு, வெளிப்படையாக, பேக்கேஜிங் கூட பிரமிக்க வைக்கிறது .... லவ் யூ (sic) ” என்று குறிப்பிட்டிருந்தார். தனது பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடிய சகோதரி வைகாவை கட்டியணைத்து கொண்டு தனது சந்தோஷத்தை ரம்யா வெளிப்படுத்தினார். மேலும், ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டு ஹாப்பி பர்த்டே என்று வைகா வாழ்த்துகிறார்.

  இந்த வீடியோவின் பின்னணியில் நான் சிரித்தால் படத்தில் வரும் "ஹாப்பி பர்த்டே டு யூ" பாட்டு இசைக்கப்பட்டது. மேலும் பல சீரியல் பிரபலங்கள் ரம்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அந்த வீடியோவை பார்க்கும்போது, ரம்யா வைகா மற்றும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நண்பர்கள், உறவினர்களின் அன்பை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதைக் காணலாம்.   
  View this post on Instagram

   

  A post shared by Vaighaa🧿 (@vaigha)


  இது தவிர, பிறந்தநாள் பெண்ணுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. வைகா மற்றும் ரம்யா இருவரும் சின்னத்திரை சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகைகள். தற்போது, ​​தென்றல் வந்து என்னை தொடும் நிகழ்ச்சியில் நந்தினி வேடத்தில் ரம்யா நடிக்கிறார். அந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பவித்ரா. அவர் அபிநயா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதில் ஹீரோவாக வினோத்பாபு நடித்து வருகிறார். இந்த தொடரின் ப்ரோமோவே நல்ல ரீச் ஆனது. அபிநயாவிற்கு கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்டும் நாயகன் செயல் மூலம் பல விமர்னசங்களை பெற்றதுடன் ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தியது.

  அந்த தொடரில் ரம்யா ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன், சத்யா மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல்களில் நடித்ததற்காக ரம்யா ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். வைகா தற்போது அம்மன் சீரியலில் வாசுகி வேடத்தில் நடத்தி வருகிறார். இவர் முதன்முதலில் டேர் தி ஃபியர் என்ற மலையாள நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இது தவிர, மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து ‘காமெடி நயிட்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: