Home /News /entertainment /

அஜித் ரசிகர்களால் மன உளைச்சலுக்கு ஆளான சீரியல் நடிகை... வைரல் வீடியோ!

அஜித் ரசிகர்களால் மன உளைச்சலுக்கு ஆளான சீரியல் நடிகை... வைரல் வீடியோ!

ஸ்ரீநிதி - அஜித்

ஸ்ரீநிதி - அஜித்

வலிமை படம் குறித்து பேசியதால் நடிகை ஸ்ரீநிதி தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    சமீபத்தில் வெளியான வலிமை படம் குறித்து பல வகையான பேச்சுகள் வந்த வண்ணம் இருக்கிறது. போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரி கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இந்த படம் ஒரு சிலருக்கு பிடித்துள்ளது. அதே போன்று ஒரு சிலருக்கு இந்த படம் பிடிக்கவில்லை.

    எதுவாக இருந்தாலும் இது அவரவர் தனிப்பட்ட கருத்தாக தான் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, இதை வைத்து பெரிய சர்ச்சைகளையோ பிரச்சனைகளையே உருவாக்க கூடாது என்பது தான் பலரின் விருப்பமாக உள்ளது. இருப்பினும் இந்த திரைப்படத்தின் கதாநாயகரான அஜித் ரசிகர்கள், யாராவது இந்த படம் குறித்து தவறாக பேசி வந்தாலோ அல்லது அது குறித்து தனது விமர்சனங்களை கூறினாலோ அந்த நபரை குறி வைத்து சமூக வலைத்தளங்களில் மோசமாக பேசி வருகிறார்கள். இப்படியொரு சம்பவம் தான், சின்னத்திரை நடிகை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. வலிமை படம் குறித்து பேசியதால் இந்த நடிகை தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதனால் அவரை அஜித் ரசிகர்கள் மோசமாக பேசுவதாக கண்ணீர் மல்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் நேரலையில் தெரிவித்துள்ளார்.

    வலிமை திரைப்படம் இரண்டு ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு வெளியாகி உள்ளது. எனவே அஜித் ரசிகர்கள் இதை மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு இந்த படத்தின் வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில் சில முக்கிய காரணங்களால் தள்ளி போடப்பட்டது. 2 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியானது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த படம் குறித்து காரசாரமான கருத்துக்கள் பலரிடம் இருந்து வந்தவண்ணம் இருக்கிறது. இது போன்று படத்திற்கு எதிராக பேசினால் அஜித் ரசிகர்கள் சும்மாவா விடுவார்கள். இந்நிலையில் தற்போது வலிமை படம் குறித்து சீரியல் நடிகையான ஸ்ரீநிதி தனது கருத்துக்களை கூறியதால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். மேலும் இதை தெரிந்து கொண்ட அஜித் ரசிகர்கள் அவரை மோசமாக பேசி வருகின்றனர்.

    இவர் வலிமை படத்தை பார்த்து விட்டு தனது கருத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், அஜித் சார் கியூடாக நடித்து உள்ளார். மேலும் படம் ஓடுவதை விட பைக் தான் அதிகம் ஓடுகிறது" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் தான் அஜித் ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது. எனவே இவரை குறி வைத்து பலர் வசைபாடி வருகின்றனர். இதை கண்ணீர் மல்க நேரலையில் வந்து கூறியுள்ளார் ஸ்ரீநிதி.

    மனைவியுடன் விபத்தில் சிக்கிய சன் டிவி வானத்தைப் போல சீரியல் பிரபலம்



     




    View this post on Instagram





     

    A post shared by Nidhi (@sreenidhi_)






    மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிக் பாஸ் அபினய்?

    'நான் எனது காசு கொடுத்து படம் பார்த்தேன். அந்த படம் எப்படி உள்ளது என்பதை பற்றி சொல்ல கூட கருத்து சுதந்திரம் எனக்கு இல்லையா. நான் ஒரு விஜய் ரசிகை என்பதால் தான் இப்படி சொல்கிறேன் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் நான் விஜய் ரசிகை அல்ல, உண்மையில் நான் சிம்பு ரசிகை." என்று தனது கருத்துக்களை இன்ஸ்டா நேரலையில் தெரிவித்துள்ளார். மேலும், 'தான் பேசியதில் எதுவும் தவறில்லை. இதற்காக மன்னிப்பு எதுவும் கேட்க முடியாது' என்றும் காட்டமாக கூறியுள்ளார். இவருக்காக சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Valimai

    அடுத்த செய்தி