Sridevi Ashok: பெண் குழந்தையை பெற்றெடுத்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் - குவியும் வாழ்த்து!

ஸ்ரீதேவி அசோக்

இன்று தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அறிவித்திருக்கிறார் ஸ்ரீதேவி. இதையடுத்து அவருக்கு சீரியல் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

    சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீதேவி, அதன் பின்னர், ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி, நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அசோக் சின்தலா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீதேவி, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கடந்த காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14-ம் தேதி) வெளியுலகிற்கு அறிவித்தார். அப்போது அவர் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து தனது கர்ப்ப கால புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார் ஸ்ரீதேவி.

    சமீபத்தில் தான் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் இன்று தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அறிவித்திருக்கிறார் ஸ்ரீதேவி. இதையடுத்து அவருக்கு சீரியல் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: