சர்ச்சை சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி சின்ன சின்ன ரோல்களில் நடித்து, பின்பு சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை
ஸ்ரீநிதி. ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் இவர் நடித்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த சீரியலில் நடித்த போது தான் ஸ்ரீநிதிக்கு சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருக்கம் ஆனார்கள். கொரோனா லாக்டவுனில் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஏகப்பட்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். லாக்டவுனில் நடிகை நட்சத்திரா கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஸ்ரீநிதியுடனே தங்கி இருந்தார் எனவும் கூறப்படுகிறது.
வீட்டுக்கு வந்த ஜனனிக்கு சக்தி கொடுத்த பேரதிர்ச்சி..எதிர் நீச்சல் சீரியலில் முக்கிய திருப்பம்!
இவர்களை தவிர
செம்பருத்தி ஷபானா, அபி டெய்லர் ரேஷ்மா ஆகியோரும் ஸ்ரீநிதி நண்பர்கள் தான். இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் ஸ்ரீநிதி தோழி சைத்ரா ரெட்டி நடித்து இருக்க, முதல் நாள் முதல் காட்சி ஸ்ரீநிதி நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு ரிவியூ எடுத்தவர்களிடம் படம் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றையும் பதிவு செய்தார். அங்கே ஆரம்பித்தது அதிலிருந்து ஸ்ரீநிதியை சர்ச்சைகள் விடுவதாக இல்லை.
கோபியை பாக்கியாவிடம் சிக்க வைக்க போவது இவரா? பாக்கியலட்சுமியில் ட்விஸ்ட்!
சிம்புவின் தீவிர ரசிகையான இவர், அவரை காதலிப்பதாக கல்யாணம் செய்து கொள்ள போவதாக சிம்பு வீட்டுக்கு முன்பு சென்று தர்ணா செய்தது இணையத்தில் வைரலானது.
அம்மாவுடன் சேர்ந்து பிரபல யூடியூப் சேனலுக்கும் பேட்டி தந்தார் ஸ்ரீநிதி. சில நாட்கள் கழித்து சீரியல் நடிகை நட்சத்திரா உயிருக்கு ஆபத்து என வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளம்ப்பினார். இப்படி தொடர்ந்து இணையத்தில் பேசும் பொருளானர் ஸ்ரீநிதி. இவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வந்தனர். அவரின் அம்மாவும் சமீப காலமாக அவள் நடவடிக்கை எதுவும் சரியில்லை என பேட்டியில் கூறி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து தற்போது ஸ்ரீநிதி சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சின்ன ரிலாக்ஸ்சேஷனுக்காக இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட பின்பு அவர் மீண்டும் வீடு திரும்புவார் என நண்பர்கள் பகிர்ந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.