ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரீநிதிக்கு மீண்டும் சீரியலில் வாய்ப்பு!

சிம்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரீநிதிக்கு மீண்டும் சீரியலில் வாய்ப்பு!

ஸ்ரீநிதி

ஸ்ரீநிதி

ஸ்ரீநிதி டிப்ரஷனில் சென்றததாகவும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிம்புவை காதலிப்பதாக கூறி அவர் வீட்டு முன்பு தர்ணா வரை சென்ற சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

  சின்னத்திரை ரசிகர்களுக்கு நடிகை ஸ்ரீநிதி மிகவும் பரிச்சயமான முகம். விஜய் டிவியில் 7சி சீரியல் மூலம் அறிமுகமாகி ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி. குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்தவர் வெள்ளித்திரை, சின்னத்திரை, விளம்பரங்களில் பிஸியாக நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அஜித்தின் வலிமை படத்தை பற்றி ஸ்ரீநிதி விமர்சித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நெட்டிசன்கள் அவரை விடாமல் ட்ரோல் செய்தனர். அதன் பின்பு யூடியூப்பில் தொடர்ந்து ஸ்ரீநிதியின் பேட்டி வெளியானது.

  முடிவுக்கு வரும் கலர்ஸ் தமிழின் சில்லுன்னு ஒரு காதல் தொடர்.. வருத்தத்தில் ரசிகர்கள்!

  அடுத்த சிலநாட்களில் சிம்புவை காதலிப்பதாக குண்டை தூக்கி போட்டார் ஸ்ரீநிதி. சிம்புவுடன் சேர்த்து வைக்க சொல்லி அவர் வீட்டின் முன்பு தர்ணா வரை சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டார். இதனால் ஸ்ரீநிதி மீது அடுகடுக்கான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த சமயத்தில் ஜீ தமிழில் நடித்து வந்த சீரியலில் இருந்து ஸ்ரீநிதி திடீரென்று விலகினார். இந்த சர்ச்சை முடிவதற்குள் சின்னத்திரை நட்சத்திரா திருமணம் குறித்து பகீர் வீடியோ ஒன்றையும் ஸ்ரீநிதி வெளியிட்டார். இதனால் சர்ச்சை நாயகி என இவருக்கு ரசிகர்கள் பெயரும் வைத்தனர்.

  தொடர்ந்து இவரின் பெயர் மீடியாவில் அடிப்பட, ஸ்ரீநிதி டிப்ரஷனில் சென்றததாகவும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஸ்ரீநிதி. ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் பேரன்பு சீரியலில் வானதியின் தங்கை ஆர்த்தி ரோலில் இனி ஸ்ரீநிதி தான் நடிக்கவுள்ளார்
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  இதற்கு முன்பு இந்த ரோலில் காற்றுக்கென்ன வேலி சீரியல் புகழ் அக்‌ஷிதா நடித்து வந்தார். நேற்றைய தினம் சீரியல் எபிசோடில் ஸ்ரீநிதி ஆர்த்தியாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வாய்ப்பையாவது சரியாக பயன்படுத்துமாறு ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Zee tamil