• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெள்ளித்திரையில் கால் பதிக்கும் பிரபல சீரியல் நடிகை ஷ்ரேயா அஞ்சன் - ரசிகர்கள் வாழ்த்து!

வெள்ளித்திரையில் கால் பதிக்கும் பிரபல சீரியல் நடிகை ஷ்ரேயா அஞ்சன் - ரசிகர்கள் வாழ்த்து!

சித்து - ஸ்ரேயா

சித்து - ஸ்ரேயா

கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்தவரான ஷ்ரேயா அஞ்சன் தமிழுக்கு வருவதற்கு முன் பல கன்னட சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

  • Share this:
வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பது போல, சின்னத்திரை நடிகர் மாற்று நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வதன் மூலம் பல மணி நேரங்கள் ரசிகர்களை மகிழ்விப்பதால், அவர்களின் மனதில் மிக எளிதாக இடம் பிடித்து விடுகின்றனர் சின்னத்திரை கலைஞர்கள். அந்த வகையில் சீரியல் ஹீரோ, ஹீரோயின், வில்லத்தனம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் காமெடி மற்றும் குணச்சித்திர ரோல்களில் நடிப்பவர்கள் கூட ரசிகர்களிடம் மிக விரைவாக பிரபலமடைந்து விடுகிறார்கள்.

பிரபல முன்னணி தமிழ் சேனலாக இருக்கும் கலர்ஸ் தமிழில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 8 முதல், 2020-ஆம் ஆண்டு அக்டோபர் வரை ஒளிபரப்பான ஹிட் சீரியல் திருமணம். இந்த சீரியலில் ஹீரோவாக பிரபல சீரியல் நடிகர் சித்து மற்றும் ஹீரோயினாக பிரபல நடிகை ஷ்ரேயா அஞ்சன் ஆகியோர் நடித்தனர். இந்த சீரியாலில் நடிகர் சித்து, சந்தோஷ் என்ற கேரக்டரிலும் நடிகை ஷ்ரேயா அஞ்சன், ஜனனி என்ற கேரக்டரிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள் இருவரின் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி திருமணம் சீரியல் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்த இருவரும் உண்மையாகவே காதலிக்க துவங்கினார்கள். இதனை தங்களது சோஷியல் மீடியா மூலமும் இருவரும் அவ்வப்போது வெளிப்படுத்தினர்.

ரீல் ஜோடி ரியல் ஜோடியானதை கண்ட ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதன் பின்னர் இருவரும் சேர்ந்தே சோஷியல் மீடியாவில் பல போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். ராஜா ராணி சீசன் 2-வில் நடிகர் சித்து ஹீரோவாக நடிக்க, ஒருபக்கம் ஷ்ரேயா அஞ்சன் சமீபத்தில் நிறைவடைந்த அன்புடன் குஷி சீரியலில் பிஸியாக நடித்து கொண்டிருந்தார்.



கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்தவரான ஷ்ரேயா அஞ்சன் தமிழுக்கு வருவதற்கு முன் பல கன்னட சீரியல்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகைகளான வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர், தர்ஷா குப்தா வரிசையில் தமிழ் வெள்ளித்திரையில் விரைவில் அறிமுகமாக இருக்கிறார் நடிகை ஷ்ரேயா அஞ்சன்.

Also read... மகனின் முதலாம் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதிய "அம்மா பிடிவாதக்காரி"என்ற கதையை அடிப்படையாக கொண்டு தயாராகி உள்ள "ஐந்து உணர்வுகள்" என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்துள்ளார் நடிகை ஷ்ரேயா அஞ்சன். அறம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் போஸ்டர் லுக்ஸ் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகி உள்ள ஷ்ரேயா அஞ்சனுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: