• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெள்ளித்திரையில் அறிமுகமாகும் வில்லி நடிகையின் மகள் - ரசிகர்கள் வாழ்த்து!

வெள்ளித்திரையில் அறிமுகமாகும் வில்லி நடிகையின் மகள் - ரசிகர்கள் வாழ்த்து!

பூஜா

பூஜா

ரேகா தற்போது விஜய் டிவி-யின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சந்திர கலா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  • Share this:
    போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்புவதில் தமிழ் டிவி சேனல்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலை இன்று நேற்றல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருவதன் மூலம், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்களை எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன மற்றும் பிரபலமாக இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ் தனியார் சேனல்களுக்கெல்லாம் முன்னோடியான சன் டிவி, ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்புவதில் திறமை வாய்ந்தது.

    இந்த சேனலில் ஓடிய மற்றும் ஓடி கொண்டிருக்கும் ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இதற்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மறுஒளிபரப்பை துவங்கி ஓராண்டுக்கும் மேலாக மீண்டும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் மெட்டிஒலி சீரியலே சாட்சி. இந்த வகையில் இரவு 8 மணிக்கு ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பான மெகாஹிட் சீரியலான தெய்வமகள் ரசிகர்களின் பேராதரவு பெற்றிருந்தது.

    விறுவிறுப்பு மற்றும் வித்தியாசமான கதை களத்துடன் 2013-ல் ஒளிபரப்பாக துவங்கிய தெய்வமகள் சீரியல், தொடங்கப்பட்ட சிலவாரங்களிலேயே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதற்கு முக்கிய காரணம் தெய்வமகள் சீரியலில் இடம்பெற்றிருந்த அண்ணியார் கேரக்டர் தான். நடிகை சாயாசிங்கின் கணவரான பிரபல சீரியல் நடிகர் கிருஷ்ணா (பிரகாஷ்), நடிகை வாணி போஜன் (சத்யா) உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் பிரகாஷின் அண்ணியாக நடித்த ரேகா கிருஷ்ணப்பாவின் நடிப்பு வேற லெவலில் ரீச் ஆனது.

    பிரகாஷ் சத்யா கேரக்டர்கள் ஒரு பக்கம் நல்ல பிரபலமானது என்றாலும் கூட, இந்த சீரியலில் காயத்ரியாக நடித்த ரேகாவின் வில்லத்தனமான நடிப்பிற்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது. குடும்பத்து உறவுகளுக்கே வில்லத்தனம் செய்த அண்ணியாரை ரசிகர்கள் திட்டி தீரத்தாலும் அதற்கேற்றவாறு பெயரும், புகழும் பெற்று மிகவும் பிரபலமடைந்தார் ரேகா கிருஷ்ணப்பா.

    அதிலும் பிரகாஷ் ஆவேசமாக அண்ணியாரே என்று கூப்பிடும் வார்த்தை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தெய்வமகள் சீரியல் 2018 பிப்ரவரியில் முடிந்த நிலையில் சிறுசிறு வேடங்களில் அவ்வப்போது தமிழ் சீரியல்களில் தலைகாட்டி வந்த ரேகா, தற்போது விஜய் டிவி-யின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இது தவிர சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியலிலும் நடித்து கொண்டிருக்கிறார்.




    சமீபத்தில் இன்ஸ்டா மூலம் தன் மகள் பூஜா விரைவில் வெளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது குறித்த இன்ஸ்டா போஸ்ட்டில் "பெரிய திரையில் என் மகளை பார்க்க போவதில் மகிழ்ச்சியடைகிறேன் ... அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்" என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரேகாவிற்கும் அவரது மகள் பூஜாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: