• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "அவரின் நினைவுகள் என்னை சுற்றி இருக்கு" - கணவரின் தற்கொலை குறித்து மனம் திறந்த நடிகை ராகவி!

"அவரின் நினைவுகள் என்னை சுற்றி இருக்கு" - கணவரின் தற்கொலை குறித்து மனம் திறந்த நடிகை ராகவி!

நடிகை ராகவி

நடிகை ராகவி

கணவரின் ஆசைப்படி மகளை ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வளர்ப்பேன்

  • Share this:
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ராகவி, நீண்ட நாட்கள் கழித்து தனது கணவரின் இறப்பு பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை ராகவி சிறு வயதிலிருந்தே திரைத்துறை கலைஞராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ராஜா சின்னா ரோஜா' மற்றும் தலபதி விஜய்யின் 'ஒன்ஸ் மோர்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். பின்னர் அவர் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

இவருக்கு திரைப்படங்களை விட சீரியல்கள் நல்ல வரவேற்பை கொடுத்தன. பின்னர், இவர் ஒளிப்பதிவாளர் சசிகுமாரை 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதியருக்கு ஒரு மகளும் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கணவன், மகள் என இவரின் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. அப்படியிருக்க திருமணமான பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சசிகுமார் கடந்த 2019ம் ஆண்டு ஜோலர்பேட்டை ரயில் நிலையம் அருகே ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியூருக்கு வேலை விஷயமாக செல்வதாக கூறிய அவர், இரு நாட்களில் பிணமாக தொங்கிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு ராகவி பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

Also Read: 24 வருட தேடல்.. 5 லட்சம் கிலோமீட்டர் பயணம்.. கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தை

கணவர் இறந்ததற்கான காரணம் புரியாமல் இருந்தபோது, சசிகுமார் நிதி சிக்கல்களில் சிக்கியதாகவும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கும் மேலாக ஷூட்டிங் செட்டில் இருந்து ஒரு கேமராவை திருடிச் சென்றார் என தனது சக பணியாளர் மகேஷ் என்பவரால் வாட்ஸ்அப் குழுக்களில் குற்றம் சாட்டப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. இது தற்கொலை அல்லது கொலை வழக்கு என்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், பொய்யான குற்றச்சாட்டுகள் காரணமாக மனம் உடைந்த சசிகுமார் இதுபோன்ற விபரீத முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

தனது கணவர் யாரோ ஒருவரால் இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும், கட்டாயம் என் கணவர் சாவுக்கு காரணமாக இருப்பவர் ஒருநாள் தண்டனையை அனுபவிப்பார் என்று ராகவி முதலில் கூறியிருந்தார். அதன்பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த ராகவி இறுதியாக மீண்டும் தன் மகளுக்காக மனதை திடப்படுத்திக்கொண்டு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் அவர் இவ்வாறு மீண்டு வருவதற்கு தனது மகள் தான் காரணம் என்றும், தனது கணவரின் அழகான நினைவுகள் தனது வீடு முழுவதும் நிறைந்திருப்பதாகவும் அவர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், தனது கணவர் இறந்ததையடுத்து அவருக்கு இறுதி சடங்குகளை ராகவி தான் செய்துள்ளார். மேலும் அந்த நேர்காணலில் பேசிய அவர், ஆரம்பத்தில் என் கணவர் மீது எனக்கு அதிக கோபம் இருந்தது. அவர் என்ன பிரச்சனையில் இருக்கிறார் என்பதை என்னிடம் கூறியிருந்தால் என்னால் முடித்த அனைத்தையும் செய்து அவரை காப்பாற்றி இருப்பேன். ஆனால், எனது கணவர் தனக்கு தொந்தரவாக இருந்த விஷயத்தை பற்றி என்னிடம் எதுவுமே பகிர்ந்து கொள்ளவில்லை" என்று ராகவி மேலும் கூறினார்.

இப்போதைக்கு தனது மகள் மீது அக்கறை செலுத்தி வருவதாகவும், தனது கணவரின் ஆசைப்படி மகளை ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வளர்ப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராகவி தற்போது 'மகராசி' மற்றும் 'என்றென்றும் புன்னகை' சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: