Home /News /entertainment /

பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தும் தயாரிப்பாளர்... தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை பைரவி

பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தும் தயாரிப்பாளர்... தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை பைரவி

பரமேஸ்வரி (எ) பைரவி

பரமேஸ்வரி (எ) பைரவி

நடிகையானால் இயக்குநர்களுடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பதால், உன்னை தயாரிப்பாளராக ஆக்குகிறேன் என ராஜா தேசிங்கு கூறினார்.

    தயாரிப்பாளர் ஒருவர் தாலி கட்டிவிட்டு தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்துவதாக சின்னத்திரை நடிகை பைரவி என்ற பரமேஸ்வரி சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

    சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி என்பவர், கடந்த மார்ச் 25-ம் தேதி போலீசில் அளித்த புகாரில், ”நான் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். வேலூரை சேர்ந்த ராஜாதேசிங்கு என்கிற சுப்பிரமணி, தயாரிப்பாளர் என அறிமுகமானார்.

    எனக்கு சின்னத்திரையில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது. நடிகையானால் இயக்குநர்களுடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பதால், உன்னை தயாரிப்பாளராக ஆக்குகிறேன் எனக் கூறினார். மயிலாடுதுறைக்கு சினிமா தயாரிப்பு தொடர்பாக என்னை அழைத்து சென்று அங்கு கோயிலில் கட்டாய தாலி கட்டினார்.

    சினிமாவில் அறிமுகமாகும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்?

    அந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், என்னை வற்புறுத்தி கட்டாயமாக உறவு கொண்டார். தற்போது என்னையும் எனது பெண் குழந்தையும் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார். என்னை போல பல பெண்களையும் அவர் ஏமாற்றியுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அவர் ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கைதானவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க - சிரஞ்சீவி படத்திலிருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டதற்கு காரணம் - மனம் திறந்த இயக்குநர்

    பரமேஸ்வரி புகார் அளித்து ஒருமாதம் ஆன நிலையில், அந்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால், நேற்று மாலை டிஜிபி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தான் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் பைரவி. அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உரிய நேரத்தில் பரமேஸ்வரி என்கிற பைரவி மீது தண்ணீர் ஊற்றினர். இதையடுத்து மெரினா காவல்நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன் பரமேஸ்வரியின் தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி