• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திருமணநாளில் கர்ப்பத்தை அறிவித்த பிரபல சீரியல் நடிகை!

திருமணநாளில் கர்ப்பத்தை அறிவித்த பிரபல சீரியல் நடிகை!

நீலிமா ராணி

நீலிமா ராணி

தனது திருமண நாளில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியிருக்கிறார் நீலிமா

  • Share this:
    சீரியல் நடிகை நீலிமா ராணி தான் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

    சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

    விஜய் டிவி-யின் அரண்மனைகிளி சீரியலில் நடித்து வந்த நீலிமா ராணி, தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகினார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார்.

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீலிமா ராணிக்கும் அவரது கணவர் இசை வாணனுக்கும் 12 வயது வித்தியாசமாம். காதலை முதலில் வெளிப்படுத்திய நீலிமா, இரு வீட்டாரின் சம்மதத்துடன், அவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அதிதி மகளும் இருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Neelima Esai (@neelimaesai)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தனது திருமண நாளில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியிருக்கிறார் நீலிமா. அதாவது தான் இரண்டாம் முறை கர்ப்பம் தரித்திருப்பதாகவும், 2022 ஜனவரியில் தங்கள் குடும்பம் 4 பேராக போகிறது எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து நீலிமாவுக்கு, ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: