Home /News /entertainment /

உன்னால் வாழ்க்கை அழகானது... கணவரை புகழ்ந்த சீரியல் நடிகை மகாலட்சுமி

உன்னால் வாழ்க்கை அழகானது... கணவரை புகழ்ந்த சீரியல் நடிகை மகாலட்சுமி

மகாலட்சுமி - ரவீந்தர் சந்திரகேகரன்

மகாலட்சுமி - ரவீந்தர் சந்திரகேகரன்

நேற்று மகாலட்சுமி - ரவீந்தர் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்துக் கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வாழ்க்கை அழகானது, அவ்வாறு நீங்கள் தான் செய்தீர்கள் என தனது கணவர் குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி.

    சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90’ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ்ஷாக வலம் வந்த இவர், பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.

    இதற்கிடையே தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வந்த போது, உடன் நடித்த சக நடிகர் ஈஸ்வரிடம் மகாலட்சுமி நெருங்கி பழகுவதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ புகார் கிளப்பினார். அதில் உண்மை இல்லை என ஈஸ்வரும், மகாலட்சுமியும் விளக்கமளித்தனர். இதையடுத்து தற்போது விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகாலட்சுமி. இதனை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்து வருகிறார்.

    விவாகரத்து, சக நடிகருடன் நெருக்கம், தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம் - சீரியல் நடிகை மகாலட்சுமி ஆல்பம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




    இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்துக் கொண்டனர். அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகின. இதற்கிடையே தற்போது கழுத்தில் தாலியுடன் தனது புதிய படத்தைப் பகிர்ந்துக் கொண்ட மகாலட்சுமி, “வாழ்க்கை அழகானது, அப்படியாக மாற்றியது நீ தான் என் புருஷா” என தலைப்பிட்டிருக்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி