Home /News /entertainment /

Ravindar: என் மீது பலருக்கும் வயித்தெரிச்சல்... வைரலாகும் ரவீந்தர் இன்ஸ்டகிராம் பதிவு

Ravindar: என் மீது பலருக்கும் வயித்தெரிச்சல்... வைரலாகும் ரவீந்தர் இன்ஸ்டகிராம் பதிவு

மகாலட்சுமி ரவீந்தர் சந்திரசேகரன்

மகாலட்சுமி ரவீந்தர் சந்திரசேகரன்

ரவீந்தர் தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மகாலட்சுமி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தன்னைப் பார்த்து வெளியில் உள்ள பலரும் வயிற்றெரிச்சலில் இருப்பதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் பிக் பாஸ் கவின் நடித்த நட்புன்னா என்னனு தெரியுமா?, சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். சில திரைப்படங்களை விநியோகமும் செய்து இருக்கிறார்.

    இதற்கிடையே கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை புகழ் மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பின் சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

    ரவீந்தர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து தனியே வாழ்ந்து வந்தார். மகாலட்சுமிக்கும் சில வருடங்களுக்கு முன்பு அனில் என்பவருடன் திருமணமாகி, 6 வயதில் சச்சின் என்ற மகனும் இருக்கிறான். கணவரை விவாகரத்து செய்த அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    குழந்தை கட்டாயம் வேணும்... திருமணத்திற்கு முன்பு ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது ரவீந்தர் தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மகாலட்சுமி. இதற்கிடையே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களின் திருமண படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது யூ-ட்யூப் சேனல்கள் தொடங்கி முன்னணி செய்தி சேனல்கள் வரை பேட்டி கொடுத்து வருகின்றனர்.




    இந்நிலையில் தற்போது ஃபயர் பீடாவை நெருப்போடு வாய்க்குள் போடும் வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ள ரவீந்தர், ”பார்த்து வயிறு எரியப்போகுது !! வெளிய இருக்கிற வயித்தெரிச்சலை விடவா ?” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி