எனக்கும் ஜெய்ஸ்ரீக்கும் தொடர்பா...? மகாலட்சுமியின் கணவர் அதிரடி பேட்டி!

எனக்கும் ஜெய்ஸ்ரீக்கும் தொடர்பா...? மகாலட்சுமியின் கணவர் அதிரடி பேட்டி!
மகாலட்சுமியின் கணவர் அனில்
  • Share this:
எனக்கும் ஜெய்ஸ்ரீக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் எனக்குத் தங்கை மாதிரி என்று மகாலட்சுமியின் கணவர் அனில் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சீரியல் நடிகர் ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெய்ஸ்ரீ விவகாரம் தான். தேவதையைக் கண்டேன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துள்ள ஈஸ்வர் அவரது மனைவி இருவரும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகின்றனர். நடிகை ஜெய்ஸ்ரீக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

சமீபத்தில் தனது கணவர், தாயாருடன் சேர்ந்து தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், மகாலட்சுமிக்கும் அவருக்கும் தவறான உறவு இருப்பதாகவும் அடையாறு போலீசில் ஜெய்ஸ்ரீ புகாரளித்தார். இதையடுத்து நடிகர் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஈஸ்வர், தன்னிடம் பணம் பறிக்கும் என்ணத்தில் தான் நடிகை ஜெய்ஸ்ரீ குற்றம் சுமத்துவதாக தெரிவித்தார். மேலும் ஜெய்ஸ்ரீ கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொய் என்று கூறிய அவர் மகாலட்சுமியின் கணவருக்கும், தனது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை மகாலட்சுமி, தனது கணவருக்கும் தனக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும், ஈஸ்வரும் நானும் ஒரே சீரியலில் நடித்து வருவதால் இருவரும் நட்பாக பழகியது ஜெய்ஸ்ரீயின் கண்களுக்கு தவறாக தெரிவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு என் கணவரும் ஜெய்ஸ்ரீயும் தான் காரணம் என்றும் மகாலட்சுமி கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில், “என்னுடன் ஏன் சேர்ந்து வாழவில்லை என்று தான் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். மகாலட்சுமியைப் பேசினால் அது என்னைப் பற்றி பேசுவதாகத்தான் இருக்கும். நான் உன்னைப் பற்றி எப்போதும் தவறாக பேசமாட்டேன்.எனக்கும் ஜெய்ஸ்ரீக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் எனக்கு தங்கை மாதிரி. அவரிடம் இரண்டு மூன்றுமுறை தான் பேசியிருப்பேன். அதற்குள் எனக்கும் அவருக்கும் தொடர்பிருப்பதாக பேசுவதெல்லாம் தவறு. நானும் ஜெய்ஸ்ரீயும் தனியாக சந்தித்ததில்லை” என்றார்.

தீபாவளி அன்று ஈஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நண்பர்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டதாகவும், அதில் புகைப்படங்கள் எடுக்க பட்டதாகவும், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறாக சித்தரிப்பதாகவும் தெரிவித்தார்.
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading