• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆண் குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை கீர்த்தி - ரசிகர்கள் வாழ்த்து!

ஆண் குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை கீர்த்தி - ரசிகர்கள் வாழ்த்து!

கீர்த்தி ஜெய் தனுஷ்

கீர்த்தி ஜெய் தனுஷ்

சமீபத்தில் இவரது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

  • Share this:
    சீரியல் நடிகை கீர்த்தி தற்போது ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

    சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று நந்தினி. இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் அவ்னி ப்ரொடக்‌ஷன் நிறுவனம் இந்த தொடரை தயாரித்திருந்தது. சுந்தர் சி இந்த தொடருக்கு கதை எழுத, ராஜ்கபூர் இதனை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமாக தயாரான இந்த தொடர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

    சீரியல் நடிகர் ராகுல் ரவி இதில் ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் நித்யா ராம், மாளவிகா இருவரும் இந்த தொடரின் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். அதோடு விஜயகுமார், காயத்ரி, விஜயலக்ஷ்மி என்று பல நட்சத்திரங்கள் நந்தினி சீரியலில் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வகையில் அந்தத் தொடரில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி. அவர் தொடர்ந்து கல்யாண பரிசு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இவர் ஜெய் தனுஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    கர்ப்பமுற்ற கீர்த்தி அதனை இன்ஸ்டாகிராமில் தெரியப்படுத்தினார். சமீபத்தில் இவரது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஜெய் தனுஷ் மற்றும் கீர்த்தி இருவரும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: