• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வளைகாப்பில் கணவருடன் வேடிக்கையாக குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி நடிகை - வைரலாகும் வீடியோ!

வளைகாப்பில் கணவருடன் வேடிக்கையாக குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி நடிகை - வைரலாகும் வீடியோ!

வளைகாப்பில் கணவருடன் வேடிக்கையாக குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி நடிகை

வளைகாப்பில் கணவருடன் வேடிக்கையாக குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி நடிகை

சில தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென்று சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து ராதிகா கேரக்டரில் தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

  • Share this:
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இல்லத்தரசிகளின் மனங்கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி. திங்கள் முதல் சனிக்கிழமைகளில் இரவு 8.30 - 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் தவறாமல் பார்த்து வருகின்றனர். இதில் பாக்கியலட்சுமி கேரக்டரில் நடிகை சுசித்ரா ஷெட்டி, இவரது கணவர் கோபியாக பிரபல சீரியல் நடிகர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் கோபியின் முன்னாள் காதலி, இந்நாள் தோழியான ராதிகா என்ற ரோலில் முன்னர் நடித்து வந்தவர் பிரபல டான்ஸரும் நடிகையுமான நந்திதா ஜெனிஃபர். குடும்பத்தினர் மற்றும் மனைவி பாக்கியாவை ஏமாற்றி விட்டு அவர்கள் மீது இல்லாத பழியெல்லாம் போட்டுவிட்டு தன்னுடன் பழகும் கோபியில் ஏமாற்று வேலைகள் பற்றி தெரியாத அப்பாவி கேரக்ட்ராக நடித்து ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்திருந்தார் நந்திதா ஜெனிஃபர்.

ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென்று சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து ராதிகா கேரக்டரில் தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். ஆனால் ராதிகா என்றால் ஜெனிஃபர் தான் என்று ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதா விளைவாக ஏராளமான ரசிகர்களின் அன்பான மெசேஜ்களை சோஷியல் மீடியாவில் பெற்றார். இதனை தொடர்ந்தே ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி முழுமையாக உணர்ந்தார்.

தொடர்ந்து தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷ செய்தியை சோஷியல் மீடியாக்கள் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். பிரசவத்திற்கு பிறகு மீண்டும் நல்ல கதையம்சம் கொண்ட சீரியல் அமைந்தால் நிச்சயம் நடிப்பதாக ரசிகர்களுக்கு கூறினார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்தாலும் கூட தான் ஒரு டான்ஸர் என்பதை நிரூபிக்கும் விதமாக தான் டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாவில் அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சீமந்தம் முடிந்த கையோடு தனது கணவருடன் அசத்தலான குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார் நடிகை நந்திதா ஜெனிஃபர். நந்திதா ஷேர் செய்துள்ள அந்த வீடியோவில் ஒரு வீடியோ பண்ணலாமா என்று கணவனிடம் கேட்கிறார்.

Also read... Roshni Haripriyan: ரசிகர்களிடம் ‘சாரி’ கேட்ட ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் - காரணம் என்ன தெரியுமா?

அதற்கு அவர் வேணாம் நான் ஆசைப்பட்டு ஓகே சொல்வேன். நீ அந்த வீடியோவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்வாய். உடனே கர்ப்பிணி பெண் குத்தாட்டம் என்று சிலர் சொல்வார்கள், வேணாம் ப்ளீஸ் என்கிறார். ஆனால் விடாத நந்திதா உணமையான குத்தாட்டம்னா என்னனு ஆடி காண்பிப்போம் என்று கூற, அதற்கு கணவரும் பண்ணலாம் என்று ஓகே கூறுகிறார்.




இதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி குத்தாட்டம் போடுகின்றனர். இந்த வீடியோவை ரசிகர்கள் பாராட்டும் அதே நேரத்தில் பாப்பா பாத்திரம், கவனமாக இருங்கள் என்று தங்களது அக்கறையையும் கமெண்ட்ஸ் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: