எல்லாத்துக்கும் காரணம் மகாலட்சுமி தான்... அவருக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது - நடிகை ஜெயஸ்ரீ

எல்லாத்துக்கும் காரணம் மகாலட்சுமி தான்... அவருக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது - நடிகை ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ, மகாலட்சுமி
  • Share this:
எனக்கும் ஈஸ்வருக்குமான பிரச்னைகளுக்கு மகாலட்சுமி மட்டும் தான் காரணம் என்று கூறியிருக்கும் நடிகை ஜெயஸ்ரீ, அவருக்கு அரசியல் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இரண்டு நடிகர், நடிகைகளின் குடும்ப பிரச்னை பரபரப்பான பேசுபொருளாகியிக்கிறது. தேவதையைக் கண்டேன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துள்ள ஈஸ்வர் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகின்றனர். நடிகை ஜெய்ஸ்ரீக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் நடிகர் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தவறான தொடர்பு இருப்பதாகவும், அதனால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் சமீபத்தில் புகாரளித்திருந்தார் ஜெயஸ்ரீ. ஜெயஸ்ரீ தனது கணவர் மீது அடையாறு போலீசில் புகாரளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறை சென்று பின்னர் ஜாமினில் வந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈஸ்வர், தனக்கும் மகாலட்சுமிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றார்.
அதைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஈஸ்வர், தனது மனைவி ஜெய்ஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் தவறான தொடர்பிருப்பதாக கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த மகாலட்சுமியின் கணவர் அனில், தனக்கும் மகாலட்சுமிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும், நான் அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும், நடிகை ஜெய்ஸ்ரீ தனக்கு தங்கை மாதிரி என்றார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ, இந்தப் பிரச்னையை சட்டப்பூர்வமாக அணுகப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர். எங்கள் அம்மா எம்.ஜி.ஆர் உடன் ‘திருடாதே பாப்பா திருடாதே’ பாடலில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். இப்படி இருக்கும் போது பணம் பிடுங்குவதற்காகத்தான் ஜெயஸ்ரீ இவ்வாறு நடந்துக்கொள்கிறார் என்று ஈஸ்வர் கூறுவது நியாயமற்றது.

ஈஸ்வருக்கு சீரியல் வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான். 15 சீரியலுக்கு மேல் அவருக்கு நான் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன். எனக்கும் என் குழந்தைக்கும் செய்த அனைத்து விஷயமும் இப்பொழுது மகாலட்சுமிக்கும் அவரது குழந்தைக்கும் செய்து கொண்டிருக்கிறார்.

நான் ஈஸ்வருடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றேன். இப்பொழுது நடக்கும் இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் மகாலட்சுமி தான் காரணம் இதுவரை ஈஸ்வர் குடும்பத்திற்கு 47 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளேன்.

மகாலட்சுமி பின்புலத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் ஆதரவு இருக்கிறது. நேற்று இரவு எனக்கு மிரட்டல் போன் கால் வந்தது. இனி இந்த பிரச்னையை சட்ட ரீதியாக அணுகப் போகிறேன்” என்றார்.
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்