• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வாய்ப்புகளை இழந்தது ஏன் தெரியுமா? ரகசியம் உடைத்த இளம் நடிகை ஹிமா பிந்து!

வாய்ப்புகளை இழந்தது ஏன் தெரியுமா? ரகசியம் உடைத்த இளம் நடிகை ஹிமா பிந்து!

நடிகை ஹிமா பிந்து

நடிகை ஹிமா பிந்து

ஆந்திராவைச் சேர்ந்த ஹிமா பிந்து பி.காம் முடித்துள்ளார். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமா ஆர்டிஸ்டுகள் என்பதால், இயல்பாகவே அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்துவிட்டது.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஓ.டி.டி மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை ஹீரோயின்களும் மக்களிடையே பாப்புலராகிவிட்டனர். சமூகவலைதளங்களிலும் வெள்ளித்திரை ஹீரோயின்கள் ஆக்டிவாக இல்லாமல் இருப்பதால், பலர் லைம் லைட்டிலேயே இல்லை என்று கூறலாம். ஆனால், சின்னத்திரை பிரபலங்கள் இன்ஸ்டாகிராம், டிவிட்டர், பேஸ்புக் என சமூகவலைளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதுடன், அவ்வப்போது இன்ஸ்டாவில் லைவ் செஷன் நடத்தி ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

இதனால், அவர்கள் பகிரும் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன.சின்னத்திரை ஹீரோயின்களின் தற்போது பிரபலமாக இருப்பவர் ஹிமா பிந்து. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் சஹானாவாக நடித்து பிரபலமானார். அவ்வப்போது ஃபோட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் அவரின் கொள்ளை அழகை பார்த்து, இவர் ஏன் இன்னும் வெள்ளித்திரை பக்கம் போகவில்லை? என கேட்கின்றனர். அதற்கு அவரே இப்போது பதில் கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த ஹிமா பிந்து பி.காம் முடித்துள்ளார். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமா ஆர்டிஸ்டுகள் என்பதால், இயல்பாகவே அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்துவிட்டது. சிறு வயதில் இருந்தே ஆக்டிங், டான்ஸ் உள்ளிட்டவைகளில் ஆர்வம் காட்டி வந்த அவருக்கு, படிக்கும்போதே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்துள்ளன. வாய்ப்புகள் தேடி வருவதால் நடிப்பு பக்கம் சென்றுவிடலாம் என அவர் நினைத்தபோது, பெற்றோர்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இப்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்து, படித்து முடித்தபிறகு நடிக்கலாம் என கூறியுள்ளனர்.

இதனால், வாய்ப்புகளை தவறவிட்ட அவர் தொடர்ந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார். கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது ஹிமா பிந்துவுக்கும் படத்தில் நடிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த முறை வாய்ப்பை தவற விடக்கூடாது என நினைத்த அவர், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் நடித்த முதல் படம் ’ஐ.ஆர் 8’. இந்தப் படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதன் பின் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Also read... நடிகை ஆலியா மானசாவை சீண்டிய சஞ்சீவ் - வைரலாகும் கியூட் வீடியோ!

தமிழில் ’இதயத்தை திருடாதே’ சீரியல் மூலம் ஹீரோயினாக நுழைந்தார். மராத்தியில் ஹிட்டான ஜிவ் ஜலா ஏடே பீசா சீரியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகியாக நடித்தார். சஹானா கதாப்பாத்திரத்தில் இவரும், ஹீரோவாக நவீனும் நடித்தனர். இருவரின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருந்தது. சுமார் 600 எபிசோடுகளைக் கடந்த இந்தத் தொடர் திடீரென நிறுத்தப்பட்டது.

மக்களிடம் இருந்த ஏகோபித்த ஆதரவை புரிந்து கொண்ட சீரியல் குழு, 2வது பாகத்தை தற்போது ஒளிபரப்பி வருகிறது. இந்த பாகத்திலும் ஹிமா பிந்து - நவீன்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். சீரியலில் நடித்தாலும் ஹிமாவுக்கு வெள்ளித்திரை மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய சூழலில் வாய்ப்புகள் அதிகம் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. தான் எதிர்பார்க்கும் கதாப்பாத்திரம் கிடைத்துவிட்டால், மறுமொழியே இல்லாமல் ஒகே சொல்ல காத்திருக்கிறார். ஏற்கனவே விட்ட வாய்ப்புகளைபோல் இனிமேல் விடக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: