சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து சின்னத்திரை நடிகை தேவி கிருபா பேசியுள்ளார்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார் சாய் பிரசாந்த். அவர் இறந்து 7 வருடங்கள் கழிந்த நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ளார் சீரியல் நடிகை தேவி கிருபா.
பெற்றோரை மனம் குளிரச் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வி.ஜே தீபிகா - பாராட்டும் ரசிகர்கள்!
ஒரு நேர்க்காணலில் பேசியுள்ள அவர், ”நடிகர் சாய் பிரசாந்த் ரொம்ப போல்டான ஆள். சாப்பாடு இல்லாமல் பணம் இல்லாமல் இருந்தது தான் அவன் இறந்ததற்கு காரணம். மனைவியுடன் பிரச்சனை, சம்பளப் பிரச்சினையால் தான் இறந்ததாக அவன் லெட்டரில் எழுதி வைத்திருந்தான் என்று நினைக்கிறேன். பண ரீதியாக இந்த துறையில் எந்த பிரச்சனையும் நான் எதிர்கொள்ளவில்லை. அதுக்கு நான் ஒர்க் பண்ண எல்லா இயக்குனர்களுக்கும் நன்றி சொல்லியே ஆகணும். எனக்கு என்ன பிரச்சனை என்று எல்லோருக்கும் தெரியும். என் அம்மா என் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்கள். என் வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளுக்கு என் அம்மா தான் காரணமே தவிர இந்தத் துறையும் மத்தவங்களும் காரணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.