ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு டூப் போட்ட சீரியல் நடிகை? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு டூப் போட்ட சீரியல் நடிகை? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனுக்கு நடிகை அஞ்சலி ராவ் டூப் போட்டதாக கூறப்படுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு தமிழ் படத்தில் சீரியல் நடிகை ஒருவர் டூப் போட்டதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. அதுமட்டுமில்லை இதுக் குறித்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

  அந்த சீரியல் நடிகை வேற யாருமில்லை. தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் பச்சக்கிளி தொடரில் வழக்கறிஞர் ரம்யா ரோலில் நடிக்கும் அஞ்சலி ராவ் தான் என இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. ஜீ தமிழில் ஒளிப்பரப்பான 'திருமதி. ஹிட்லர்' தொடர் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார் நடிகை அஞ்சலி ராவ். பல சீரியல்கள், வெப் தொடர்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லை இவர் தென்னிந்திய அழகி போட்டியிலும் கலந்து கொண்டு செமி ஃபைனல்ஸ் வரை சென்று இருக்கிறார்.

  மீண்டும் சீரியலுக்கு திரும்பிய அர்னாவ். போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு சொன்ன தகவல்!

  அச்சம் என்பது மடமையடா  படத்தில் சிம்புவின் தங்கையாகவும் நடித்து இருக்கிறார். மாடலிங் துறை மூலம் சினிமா வாய்ப்பு, அதிலிருந்து தற்போது சின்னத்திரை வாய்ப்பு என அஞ்சலியின் கெரியர் கிராஃப் சீராக செல்கிறது. ‘சுவாதி நட்சத்திரம் சோதி’ நிகழ்ச்சி மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் அஞ்சலி. ஆனால் அதன் பின்பு தமிழில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அஞ்சலி ராவ் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் உலா வருவதை பார்க்க முடிகிறது.

  அதாவது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனுக்கு நடிகை அஞ்சலி ராவ் டூப் போட்டதாக கூறப்படுகிறது.மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவான கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து இருந்தார். இது ஒரு அனிமேஷ் படம் ஆகும். இதில் தீபிகாவுக்கு நடிகை அஞ்சலி ராவ் டூப் போட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actress Deepika padukone, Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial