Home /News /entertainment /

சீரியலில் ‘கம் பேக்’ கொடுக்க வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ஆல்யா மானசா..

சீரியலில் ‘கம் பேக்’ கொடுக்க வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ஆல்யா மானசா..

நடிகை ஆல்யா மானசா

நடிகை ஆல்யா மானசா

Alya Manasa : இரண்டாவது குழந்தை பிறந்து 6 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்காக உடல் எடையை குறைக்க தொடங்கியுள்ளார் ஆல்யா மானசா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சினிமாவில் நடிப்பவர்களுக்கு எந்த அளவு ஃபேன் ஃபாலோவிங் இருக்கிறதோ அதே அளவுக்கு சின்னத்திரைக்கும் உள்ளது என்பதில் எந்த வித மாற்றும் கருத்தும் இல்லை.

    ன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு கூடுதலான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைக்கிறது. அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா.

    2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக அறிமுகமானார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். சீரியலில் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    பின்னர் இந்த காதல் ஜோடி திருமணமும் செய்துக்கொண்டனர். முதல் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார்.ராஜா ராணி பாகம் ஒன்றிற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.



    ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார். 9 மாதங்கள் வரை சீரியலில் நடித்த ஆல்யா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானசா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by alya_manasa (@alya_manasa)





    ஆல்யா மானசா தனக்கென தனி பர்செனல் ட்ரைனர் ஒருவரை வைத்து உடல் எடையை குறைத்து வருகிறார். தனது பர்செனல் ட்ரைனருடன் பாக்சிங் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ‘விரைவில் கம் பேக் கொடுப்பதற்கான முயற்சியில் உள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

     

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actress, TV Serial

    அடுத்த செய்தி