முன்பெல்லாம் வெள்ளித்திரையில் மனம் கவர்ந்த நடிகைகள் பட்டியல் மற்றும் மக்களின் கனவுக்கன்னி என நடிகைகளின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளிவருவது உண்டு. தற்போது அந்த வரிசையில் சின்னத்திரை நடிகைகள் பட்டியலும் இடம்பிடித்துள்ளது. சீரியல்கள் என்றால் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் மட்டும் பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்த நிலையில், சமீப காலமாக இளசுகளை கட்டிப்போடத் தொடங்கியுள்ளது.
அதிலும் இந்த கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து பொழுதுபோக்கிற்காக மக்கள் அனைவருமே தொலைக்காட்சி பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர்.
இதனால் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் டிஆர்பி-யை அதிகரிக்க போட்டிபோட்டுக்கொண்டு சீரியல் கதைக்களத்தை விறுவிறுப்பாக அமைத்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல்களுக்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. அதேபோல, ஒரு குறிப்பிட்ட சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
மேலும் சீரியல் நடிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால், ரசிகர்களின் ஆதரவு சோசியல் மீடியாவில் அவர்களுக்கு பெருகியது. இந்நிலையில் அதிகம் ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகள் யார் என்ற கருத்துக் கணிப்பு தற்போது நடந்துள்ளது. அதில் முதல் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் பட்டியலையும் வெளியிட்டள்ளனர்.
1.காவியா:
இவர் முதன்முதலில் பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு மிக மிக அதிகம்.
2.ஜாக்லின்:
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தான் ஜாக்லின். இவர் தேன்மொழி பிஏ என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இருப்பினும் இவருக்கு என இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் நிலையாகவே இருக்கிறது.
இதையும் படிங்க.. பிக்பாஸை விட்டு வெளியே போன அபிநய் இடமிருந்து இப்படியொரு பதிவா?
3.ஸ்ரேயா:
திருமணம் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஸ்ரேயா. அதன்பின் விஜய்டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வந்தார். பின்னர் இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது இவர் ஜீதமிழ் தொலைக்காட்சியில் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
4.ஷபானா:
ஜீதமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளையும் தன்பக்கம் கவர்ந்தவர் நடிகை ஷபானா. இந்த தொடரில் கதாநாயகன் இடையில் மாற்றப்பட்டிருந்தாலும் இவருக்காக சீரியல் இன்னும் சுவாரஸ்யம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது.
5.ஜனனி:
நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
6.சைத்ரா ரெட்டி :
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் அழகான வில்லியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் இவர். தற்போது இவர் கயல் என்ற சீரியலில் கதாநாயகியாக கலக்கி வருகிறார். மேலும் இவரது சீரியல் தான் டிஆர்பி-யில் முதலிடம் பிடித்து வருகிறது.
7. அர்ச்சனா:
விஜேவாக மீடியாவுக்குள் நுழைந்தவர் அர்ச்சனா. தற்போது இவர் ராஜா ராணி 2 சீரியலில் காமெடி வில்லியாக அசத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.
8.ஆஷா கவுடா:
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஆஷா கவுடா. இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
9.ரேஷ்மா:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ரேஷ்மா. தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் டெய்லர் என்ற தொடரில் கலக்கிக் கொண்டு வருகிறார்.
10.ரவீனா:
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மௌனராகம் 2 என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பல தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.