ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கம் பேக்கிற்கு ரெடியான ஆல்யா! க்யூட் டான்ஸ் வீடியோ வைரல்..

கம் பேக்கிற்கு ரெடியான ஆல்யா! க்யூட் டான்ஸ் வீடியோ வைரல்..

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

Alya Manasa : சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுஸ் இருக்கிறது. அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா.

    2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக அறிமுகமானார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். சீரியலில் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    பின்னர் இந்த காதல் ஜோடி திருமணமும் செய்துக்கொண்டனர். முதல் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார்.ராஜா ராணி பாகம் ஒன்றிற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார்.9 மாதங்கள் வரை சீரியலில் நடித்த ஆல்யா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் என் ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். ஆல்யா, சஞ்சீவ் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக அடிக்கடி வீடியோக்களை பகிர்ந்து வருவார்கள். ஆல்யா மானசா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த டான்ஸ் வீடியோ செம்ம வைரலாகி வருகிறது.

    also read : கணவருடன் ரொமான்டிக் போட்டோஸ் பதிவிட்ட சுந்தரி சீரியல் நடிகை!




     
     

     

     


    View this post on Instagram


     

     

     

     

    A post shared by alya_manasa (@alya_manasa)



    இதில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் ஆல்யா மானசா வேற லெவலில் டான்ஸ் ஆடுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ளி வருகிறது. உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்கும் ஆல்யா அடுத்து சீரியல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Alya Manasa, Video